'ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்கும் ரோகித் சர்மா?’... ‘பிசிசிஐ தலைவர் கங்குலியின் சூசக பதில்’... ‘எதிர்பாராமல் வந்த திடீர் திருப்பம்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ரோகித் சர்மாவை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சேர்க்காமல் பிசிசிஐ இழுத்தடித்து வந்தநிலையில், தற்போது அவரை இந்திய அணியில் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்கும் ரோகித் சர்மா?’... ‘பிசிசிஐ தலைவர் கங்குலியின் சூசக பதில்’... ‘எதிர்பாராமல் வந்த திடீர் திருப்பம்’...!!!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் தொடர் நவம்பர் 27 அன்று துவங்க உள்ளது. அதை அடுத்து டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. ஜனவரி இரண்டாம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த மூன்று தொடர்களுக்கான இந்திய அணியிலும் ரோகித் சர்மா இடம் பெறவில்லை. அவருக்கு ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட தசைப்பிடிப்பை காரணமாகக் காட்டி அவர் அணியில் இருந்து ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டார். இந்த தகவல அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், சர்ச்சைக்கும் வித்திட்டது.

BCCI likely to send Rohit Sharma on Australia tour after IPL

பிசிசிஐ-க்கும் பததிலடி கொடுக்கும் வகையிலும், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் ரோகித் சர்மா, ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் பங்கேற்று ஆடினார், தான் முழு உடற்தகுதியுடன் இருப்பதை உறுதி செய்தார். பிளே-ஆஃப் சுற்றிலும் பங்கேற்ற அவர், இறுதிப் போட்டியிலும் ஆட உள்ளார்.

இதை அடுத்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ரோகித் சர்மாவை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது பிசிசிஐ. அவர் நவம்பர் 11 அன்று கிளம்ப உள்ள இந்திய அணியுடன் கடைசி நேரத்தில் சேர்க்கப்படுவார் என கூறப்படுகிறது. ஆனாலும், அதில் ஒரு சிக்கல் உள்ளது. பிசிசிஐ அவரது உடற்தகுதியை சோதிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆடிய போட்டிகள் மட்டுமின்றி, இறுதிப் போட்டியிலும் அவர் முழு உடற்தகுதியுடன் இருக்கிறாரா என சோதித்த பின்னரே அவரை போட்டிகளில் பங்கேற்க வைப்பது பற்றி முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.

BCCI likely to send Rohit Sharma on Australia tour after IPL

மேலும் இந்திய கேப்டன் விராட் கோலி பாதி டெஸ்ட் தொடரில் விலகுவார் என ஒரு தகவல் வலம் வருகிறது. இந்த தொடருக்கு ராகுலை கேப்டனாக நியமிக்க முடியாது என்பதால், ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிக்கு எதிராக ராகுலை கேப்டனாக அனுப்ப முடியாது. இதனால் ரோகித் சர்மாவை அழைக்கலாம் என்று பிசிசிஐ கருதுகிறது. அதாவது ரோகித்தை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்து டெஸ்ட் தொடரின் கேப்டனாக நியமிக்கலாம் என்று பிசிசிஐ கருதுகிறது. இதை கங்குலியும் கூட சூசகமாக தெரிவித்து இருந்தார்.

விராட் கோலி விலகினால், அந்த நேரத்தில் இந்திய அணியில் பேட்டிங் பலவீனமடைய வாய்ப்பு உள்ளது. அப்போது மற்ற முக்கிய வீரர்கள் அனைவரும் அணியில் இருப்பது அவசியம். எனவே, ரோகித் சர்மா நிச்சயம் டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் உடல்நிலை காரணம் காட்டி, ஒருநாள் தொடரில் மட்டும் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படும்.

மற்ற செய்திகள்