அடுத்த ஐபிஎல் சீசனில் களமிறங்கும் ‘புதிய’ அணி?.. அப்போ ‘கேப்டன்’ யாரா இருக்கும்..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅடுத்த ஐபிஎல் சீசனில் புதிதாக ஒரு அணியை பிசிசிஐ சேர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் டி20 போட்டிகள் ஆண்டுதோறும் விமர்சையாக நடைபெற்று வருகின்றன. 2008ம் ஆண்டு முதன்முதலாக தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர், இதுவரை 13 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு புதிதாக ஒரு அணியை சேர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 8 அணிகள் உள்ளன. இந்த நிலையில் 9-வதாக குஜராத்தை மையப்படுத்தி புதிதாக ஒரு அணி சேர்க்க உள்ளதாக The Hindu செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த அணியை அதானி குழுமம் வாங்கப்போவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே குஜராத் லயன்ஸ் என்ற பெயரில் அணி ஒன்று இரு ஐபிஎல் சீசனில் விளையாடியது. இந்த அணியை சுரேஷ் ரெய்னா கேப்டனாக இருந்து வழி நடத்தினார். அதனால் புதிய அணிக்கு மீண்டும் ரெய்னாவே கேப்டனாக இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. தற்போது ரெய்னா சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்