'ஏகப்பட்ட சர்ச்சைகள்...' 'இது எல்லாமே முடிவுக்கு வரப்போகுது...' ஐபிஎல் 2021 சீசனில் அறிமுகமாகும் 'புதிய விதிகள்'...! - பிசிசிஐ அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் எழுந்த சர்ச்சைக்களால் பிசிசிஐ சில புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது

'ஏகப்பட்ட சர்ச்சைகள்...' 'இது எல்லாமே முடிவுக்கு வரப்போகுது...' ஐபிஎல் 2021 சீசனில் அறிமுகமாகும் 'புதிய விதிகள்'...! - பிசிசிஐ அறிவிப்பு...!

கிரிக்கெட் தொடர்களில் ஏற்படும் தொடர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிசிசிஐ ஐபிஎல் 2021 சீசனுக்கு புதிய விதிகளை அமல்படுத்தி உள்ளது.

நடந்து முடிந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த கிரிக்கெட் தொடரில் எப்போதும் போல சாப்ட் சிக்னல், அம்பயர் கால் போன்றவற்றில் பெரும் குழப்பமே ஏற்பட்டது.

ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஐபிஎல் 2021 சீசனில் இந்த குழப்பங்களை தவிர்க்கும் விதமாக பிசிசிஐ புதிய விதிகளை அமல்படுத்தி உள்ளது.

அதில் சாப்ட் சிகினாலுக்கு பிசிசிஐ தடை போட்டு, சாப்ட் சிக்னல் விவகாரங்களில் டிவி அம்பயர் தங்களுக்கு உள்ள அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தி, அதன் மூலம் இறுதி முடிவை எட்டலாம் என சொல்லப்பட்டதுள்ளது.

அதேநேரத்தில் DRS முறையில் அம்பயர் கால் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

                              BCCI has implemented some new rules IPL 2021 season

மேலும் கள நடுவர்கள் எடுக்கின்ற ஷார்ட் ரன் மற்றும் நோ பால் தொடர்பான முடிவுகளில் தற்போது வரை கள நடுவர்களின் முடிவே இறுதி முடிவு ஆகும். தற்போது மூன்றாவது நடுவர்கள் குறுக்கிடலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. எனவே இது சம்பந்தமான முடிவுகளில் தவறு நடக்க வாய்ப்பில்லை. கடந்த ஆண்டு ஐபிஎல்-ல் பஞ்சாப் அணி இது போன்று ஒரு ரன்னில் வெற்றி வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு புதிய விதியாக, இரண்டு இன்னிங்ஸின் இறுதி ஓவரான இருபதாவது ஓவர் ஆட்டத்தை கண்டிப்பாக 90 நிமிடங்களுக்குள் வீசியாக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 90வது நிமிடத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ இருபதாவது ஓவர் வீசினால் போதும் என இருந்தது. அந்த விதியில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. போட்டியின் நேரத்தை குறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற புதிய விதிகளினால் தவறுகள் பெருமளவில் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்