பெரிதாக வெடிக்கும் 'இந்தியா' - 'ஆஸ்திரேலியா' கிரிக்கெட் விவகாரம்... 'அதிர்ச்சி' முடிவை எடுக்கவுள்ள 'பிசிசிஐ'??... பரபரப்பு 'தகவல்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி கிரிக்கெட் போட்டிகள் ஆடி வரும் நிலையில், இன்னும் 2 டெஸ்ட் போட்டிகளுடன் இந்த நீண்ட தொடர் முடிவடையவுள்ளது.

பெரிதாக வெடிக்கும் 'இந்தியா' - 'ஆஸ்திரேலியா' கிரிக்கெட் விவகாரம்... 'அதிர்ச்சி' முடிவை எடுக்கவுள்ள 'பிசிசிஐ'??... பரபரப்பு 'தகவல்'!!!

இதனிடையே, கொரோனா விதிகளை மீறி இந்திய வீரர்களான ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட், நவ்தீப் சைனி, ப்ரித்வி ஷா, சுப்மன் கில் ஆகியோர் வெளியேயுள்ள உணவகம் சென்று உணவருந்தியதாகவும், அங்கு ரசிகர் ஒருவரை கட்டிபிடித்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியது.bcci disappointed by comments of australia govt minister

இதனையடுத்து, ஐந்து பேரும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், இந்திய வீரர்களின் செயல் கடும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. தொடர்ந்து, இந்திய வீரர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனையில் நெகடிவ் என முடிவுகள் வந்தது. இந்திய வீரர்களின் செயலால் ஆஸ்திரேலியாவின் அரசியல் தலைவர்கள் சிலர் கடுமையாக கோபமடைந்துள்ளனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் நடைபெறவுள்ளது. இப்பகுதியில் கொரோனா தொற்று பரவல் அதிகமுள்ளது. இதனால், இங்கு கட்டுப்பாடுகளும் கடுமையாக இருக்கும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், கட்டுப்பாடுகள் சிலவற்றை கடைசி டெஸ்ட் போட்டியின் போது தளர்க்க வேண்டுமென இந்திய அணி சார்பில் கூறப்பட்டிருந்தது.bcci disappointed by comments of australia govt minister

இதனால், ஆஸ்திரேலியா சுகாதாரத்துறை அமைச்சர் ஒருவர், ஆஸ்திரேலியா வந்துள்ள இந்திய வீரர்கள் இங்குள்ள விதிகிளை கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்றும், அப்படி நடக்க முடியாவிட்டால் இங்கு விளையாட வர வேண்டாம் என்றும், விருப்பமில்லையென்றால் திரும்பி இந்தியாவிற்கு செல்லலாம் என்றும் இந்திய கிரிக்கெட் அணியை எச்சரித்திருந்தார்.

அரசியல்வாதியின் இந்த கருத்தால் பிசிசிஐ கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டாம் என நாங்கள் எண்ணியிருந்தால், தற்போது வந்த ரோஹித் ஷர்மாவை ஏன் 14 நாட்கள் தனிமையில் இருக்கச் செய்தோம் என்றும், எங்களின் சார்பில் ஆஸ்திரேலிய நாட்டிற்கும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நிர்வாகத்திற்கும் எந்தவித பிரச்சனையையும் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.bcci disappointed by comments of australia govt minister

ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் உட்பட்டு நாங்கள் இருந்த போதும், கொஞ்சம் அதிகமாக எங்கள் மீது குற்றம் சுமத்துவது ஏற்புடையதல்ல என்றும் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது. கொரோனா விவகாரம் சற்று பூதாகரமாகியுள்ள நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற பிசிசிஐ ஒப்புக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மற்ற செய்திகள்