2020 'ஐபில்'ல.. மொத்தம் '9 டீம்' விளையாட போகுதாம்.. என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கிரிக்கெட் உலகில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக உலகம் முழுவதும் உள்ள வீரர்கள், இளம்வீரர்கள் கலந்து விளையாடும் ஐபிஎல் போட்டிகளுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

2020 'ஐபில்'ல.. மொத்தம் '9 டீம்' விளையாட போகுதாம்.. என்ன காரணம்?

இந்தநிலையில் ஐபிஎல்லில் புதிதாக ஒரு அணி வருகின்ற 2020-ம் ஆண்டில் சேர்க்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 2 புதிய அணிகளை சேர்க்கலாம் என பிசிசிஐ விரும்பியதாகவும், 90 போட்டிகளுக்கு மேல் நடத்த முடியாது என்பதால் கூடுதலாக ஒரு அணியை மட்டும் சேர்க்கலாம் என முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த புதிய அணி குஜராத்தாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அகமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் கிரிக்கெட் மைதானம் தற்போது கட்டப்பட்டு வருகிறது. 2020 மார்ச் மாதத்துடன் இந்த கட்டுமான பணிகள் முடிவுக்கு வந்துவிடும். எனவே பல்வேறு வளங்களையம் கருத்தில் கொண்டு, அந்த 9-வது அணியை ஏலத்தில் எடுப்பவர்கள் அகமதாபாத்தை சார்ந்தவர்களாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

இந்த புதிய அணி சேர்ப்பது தொடர்பான இறுதி முடிவு டிசம்பர் 1-ம் தேதி எடுக்கப்பட உள்ளதாகவும், அப்போது இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.