‘பறிபோன இங்கிலாந்து தொடர்’.. வயதில் குளறுபடி, இளம் வீரருக்கு தடை விதித்த பிசிசிஐ..! அதிர்ச்சியில் இந்திய அணி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவயது சான்றிதழில் முறைகேடு செய்ததாக மும்பை இந்தியன்ஸ் அணி வீரருக்கு விளையாட தடை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் டி20 போட்டிகளில் முன்னணி அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி இருந்து வருகிறது. இந்த வருடம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் 4 -வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி மும்பை இந்தியன்ஸ் அணி சாதனை படைத்தது.
இந்நிலையில் மும்பை அணியில் விளையாடிய இளம் வேகப்பந்து வீச்சாளர் ரஷிக் சலாமுக்கு கிரிக்கெட் விளையாட இரண்டு ஆண்டுகள் பிசிசிஐ தடை விதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஜம்மு-காஷ்மீர் மாநில கல்வித்துறை அம்மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தது. அதில், ரஷிக் சலாமின் 10 -ம் வகுப்பு சான்றிதழில் உள்ள பிறந்த நாள் தேதியும், கிரிக்கெட் சங்கத்திற்கு வழங்கிய வயது தொடர்பான தகவலும் ஒத்துப்போகவில்லை என தெரிவித்திருந்தது.
இதனை அடுத்து இந்த கடிதத்தின் மீது நடைபெற்ற விசாரணையை அடுத்து ரஷிக் சலாமுக்கு 2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட பிசிசிஐ தடை விதித்தது. மேலும் ரஷிக் சலாம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். பிசிசிஐ விதித்த இந்த தடையால் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை ரஷிக் சலாம் இழந்துள்ளார். இதனால் இவருக்கு பதிலாக பிரபாத் மயுரா என்ற வீரர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.