'இனி பார்க்க தான போற... இந்த காளியோட ஆட்டத்த'!.. முதல் மேட்ச்சிலேயே மாஸ் காட்டினதுக்கு... பிசிசிஐ கொடுத்த 'வாவ்' சர்ப்ரைஸ்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய டி20 அணியில் போராடி இடம்பிடித்த சூர்யகுமார் யாதவுக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கியுள்ளது பிசிசிஐ.

'இனி பார்க்க தான போற... இந்த காளியோட ஆட்டத்த'!.. முதல் மேட்ச்சிலேயே மாஸ் காட்டினதுக்கு... பிசிசிஐ கொடுத்த 'வாவ்' சர்ப்ரைஸ்!!

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடருக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் சிறப்பாக் ஆடிய சூரியகுமார் யாதவுக்கு ஒரு நாள் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  

இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக வரும் மார்ச் 23ம் தேதி முதல் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி20 போட்டியில் அரைசதம் அடித்து அசத்திய சூர்யகுமார் யாதவுக்கு ஒருநாள் தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஆடி வரும் சூரியகுமார் யாதவ், கடந்த 2018ம் ஆண்டு முதல் ஐபிஎல்-ல் சிறப்பாக ஆடி வருகிறார். கடந்த சீசனில் மட்டும் 480 ரன்கள் குவித்தார். இதனால் நீண்ட நாள் போராட்டத்திற்கு பின்னர் அவருக்கு இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

2வது டி20 போட்டியில் அறிமுகமான அவருக்கு நேற்றைய நடைபெற்ற 4வது டி20 போட்டியிலேயே பேட்டிங் ஆடினார். தனது முதல் இன்னிங்ஸிலேயே அரை சதம் அடித்து அனைவரையும் வியக்க செய்தார்.

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், சுப்மன் கில், ஷிரேயாஸ் ஐயர், சூரியக்குமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், கே.எல். ராகுல், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், குர்னல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், டி. நடராஜன், புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர் ஆகியோர் இந்த ஆண்டு நவம்பரில் தொடங்கவிருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கு தயாராவதற்காக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஒருநாள் போட்டித் தொடரிலும் புதியவர்களுக்கு வாய்ப்பளித்திருப்பதால் பிசிசிஐ என்ன திட்டம் வைத்துள்ளது என கேள்வி எழுந்துள்ளது.

 

மற்ற செய்திகள்