IPL 2022 : பிளே ஆப், ஃபைனல்ஸ் எங்க, எப்போ நடக்க போகுது??.. 'BCCI' வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடர் தற்போது இந்தியாவில் வைத்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

IPL 2022 : பிளே ஆப், ஃபைனல்ஸ் எங்க, எப்போ நடக்க போகுது??.. 'BCCI' வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..

Also Read | "வெயில் நேரம்'ல,.. இனிமே சைக்கிள்'ல டெலிவரி வேணாம் பா" உணவு டெலிவரி ஊழியருக்கு போலீசார் கொடுத்த இன்ப அதிர்ச்சி

இதுவரை பாதிக்கும் மேற்பட்ட லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், புதிய இரண்டு அணிகளான குஜராத் மற்றும் லக்னோ, புள்ளிப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணி, 16 புள்ளிகளுடன் முதலிடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 14 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது.

தீவிரம் காட்டும் அணிகள்

தொடர்ந்து, இன்று (03.05.2022) நடைபெற்று வரும் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியைத் தவிர அனைத்து அணிகளுக்கும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருப்பதால், அனைத்து அணிகளும் தீவிரமாக போராடி வருகிறது.

ஒவ்வொரு அணிகளுக்கும் நான்கு முதல் ஐந்து போட்டிகள் மட்டுமே மீதம் இருப்பதால், அனைத்து அணிகளும் தொடர் வெற்றிகளைக் குவித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் தான் குறியாக உள்ளது. இதனால், அடுத்தடுத்த போட்டிகளின் போது ரசிகர்களுக்கு நிச்சயம் பெரிய அளவில் விறுவிறுப்பு இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

bcci announce schedule and venue details for ipl playoffs 2022

பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு..

மேலும், கொரோனா தொற்றின் காரணமாக, மும்பை மற்றும் புனேவை சுற்றியுள்ள மைதானங்களில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிளே ஆப் மற்றும் இறுதி போட்டி எங்கே நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

பிளே ஆப் எங்க நடக்குது?

இந்நிலையில், பிளே ஆப் போட்டிகள் மற்றும் இறுதி போட்டி எங்கே வைத்து நடைபெறும் என்பது பற்றி பிசிசிஐ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. முதல் குவாலிஃபயர் போட்டி, மே 24 ஆம் தேதி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.

bcci announce schedule and venue details for ipl playoffs 2022

தொடர்ந்து, எலிமினேட்டர் போட்டி, மே 25 ஆம் தேதியன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், குவாலிஃபயர் 2 அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மே 27 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, இறுதி போட்டி அதே நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து, மே 29 அன்று நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அகமதாபாத் மற்றும் கொல்கத்தா மைதானங்களில், லீக் போட்டிகள் எதுவும் நடைபெறாத நிலையில், பிளே ஆப் சுற்று மற்றும் இறுதி போட்டிகள் அங்கு வைத்து நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

CRICKET, IPL 2022, BCCI, IPL PLAYOFFS 2022

மற்ற செய்திகள்