ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன் ‘எத்தனை’ வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்..? கசிந்த முக்கிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 2022-ம் ஆண்டு ஐபிஎல் (IPL) தொடரில் இரண்டு புதிய அணிகள் இணைக்கப்பட உள்ளதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களையும் கலைத்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இதனிடையே, புதிதாக வரும் இரண்டு அணிகள் ஏலத்துக்கு முன்பாகவே 3 வீரர்களை ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என பிசிசிஐ கூறியதாக தகவல் வெளியானது. அது இந்திய வீரராகவோ அல்லது வெளிநாட்டு வீரராகவோ இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற அணிகள் எத்தனை வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்து வந்தது.
இந்த நிலையில், ஐபிஎல் மெகா ஏலத்துக்கு (Auction) முன் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 3 இந்திய வீரர்களும், ஒரு வெளிநாட்டு வீரரும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் ஏலத்தின் போது அனைத்து அணிகளுக்கும் RTM (Right to Match) என்ற வசதி கொடுக்கப்படும். அதில், ஒரு அணி தங்களுக்கு விருப்பமான வீரரை தக்க வைக்காமல் வெளியேற்றிவிட்டால், மீண்டும் ஏலத்தின்போது எந்தவித போட்டியும் இன்றி RTM வசதியை பயன்படுத்தி அந்த வீரரை வாங்க முடியும். தற்போது இந்த வசதி நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்