'என்னது!... இனி டீமுக்கு 13 Players-ஆ???'... 'இதுக்கே ஷாக்கானா எப்படி?!!... 'ஏடாகூடமாக Rulesஐ மாற்றிய பிரபல டி20 தொடர்'... 'கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவின் ஐபிஎல் தொடர் போலவே ஆஸ்திரேலியாவில் பிரபலமான பிக் பாஷ் லீக் எனும் டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

'என்னது!... இனி டீமுக்கு 13 Players-ஆ???'... 'இதுக்கே ஷாக்கானா எப்படி?!!... 'ஏடாகூடமாக Rulesஐ மாற்றிய பிரபல டி20 தொடர்'... 'கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்!!!'...

பிபிஎல் எனும் இந்த டி20 தொடரில் சுவாரஸ்யத்தை கூட்டி ரசிகர்களை ஈர்ப்பதற்காக அடிக்கடி கிரிக்கெட்டை தாண்டிய சில புதுப்புது விஷயங்கள் உள்ளே புகுத்தப்பட்டு வருகிறது. தற்போது அந்த வரிசையில் 2020 பிக் பாஷ் லீக் தொடரில் 3 புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து ரசிகர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிண்டல் செய்து வருகின்றனர். ஐபிஎல்லுக்கு அடுத்து மிகப் பெரும் டி20 லீக் தொடராக பிபிஎல் உள்ளபோதும் ஒவ்வொரு ஆண்டும் அதிக பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும் என்ற அழுத்தத்தில் அதன் நிர்வாகிகள் இருப்பதாலேயே இதுபோன்ற புதுமைகள் தற்போது புகுத்தப்பட்டு வருகிறது.

BBL2020 Fans Slam New Big Bash League Rules X Factor Power Surge

இந்நிலையில்தான் பிக் பாஷ் லீக் நிர்வாகம் தற்போது மூன்று வித்தியாசமான விதிகளை அமல்படுத்தியுள்ளனர். பவர்பிளே ஓவர்களை மாற்றி அமைக்கும் பவர் சர்ஜ், 13 வீரர்களை கொண்ட அணியில் மாற்று வீரர்கள் போட்டிகளுக்கு இடையே பங்கேற்க வாய்ப்பளிக்கும் எக்ஸ் ஃபேக்டர், 10 ஓவர்களில் எதிரணியை விட கூடுதல் ரன்கள் எடுத்தால் போனஸ் புள்ளி அளிக்கும் பாஷ் பூஸ்ட் ஆகியவையே அந்த புதிய விதிகள் ஆகும். முன்னதாக கடந்த ஆண்டு பிபிஎல் தொடரில் டாஸ் போட காசு வேண்டாம், பேட்டில் டாஸ் போடலாம் என்ற புதிய முறையை அமலுக்கு கொண்டு வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

BBL2020 Fans Slam New Big Bash League Rules X Factor Power Surge

டி20 போட்டிகளில் தற்போது முதல் ஆறு ஓவர்கள் பவர்பிளே ஆக உள்ள நிலையில், அதை மாற்றி அமைத்து முதல் நான்கு ஓவர்கள் பவர்பிளேவாகவும், கூடுதல் இரண்டு ஓவர்கள் பவர்பிளேவை 10 ஓவர்களுக்கு பின் எப்போது வேண்டுமானாலும் பேட்டிங் செய்யும் அணி எடுத்துக் கொள்ளலாம் என்பதே பவர் சர்ஜ் விதியாகும். அதேபோல ஒவ்வொரு அணியும் டாஸ் நிகழ்வின் போது 13 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்து, அணியில் கூடுதலாக உள்ள இரு வீரர்கள் பேட்டிங் செய்யாத ஒரு வீரருக்கு மாற்றாக 10வது ஓவருக்கு பின் பேட்டிங் செய்ய இறங்கலாம் அல்லது ஒரு ஓவருக்கு அதிகமாக பந்து வீசாத ஒரு பந்துவீச்சாளருக்கு மாற்றாக பந்து வீச களத்துக்கு வரலாம்.

BBL2020 Fans Slam New Big Bash League Rules X Factor Power Surge

மேலும் இனி வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளிகளுக்கு பதிலாக 3 புள்ளிகளும், முதல் 10 ஓவர்களில் எதிரணி எடுத்த ஸ்கோரை சேஸிங் செய்யும் அணி 10 ஓவர்களில் முந்தினால் ஒரு போனஸ் புள்ளியும், அதை செய்யத் தவறினால் முதலில் பேட்டிங் செய்த அணிக்கு ஒரு போனஸ் புள்ளியும் வழங்கப்பட உள்ளது. இந்த புதிய விதிகள் மூலம் பிபிஎல் கிரிக்கெட் தொடர் முன்னேற்றம் அடையும் என நிர்வாகத்தின் தரப்பில் கூறப்பட்டாலும் ரசிகர்கள் இவையெல்லாம் நல்ல கிரிக்கெட்டை மோசமாக்கும் முயற்சியே எனக் கூறி இந்த மாற்றத்தை கடுமையாக சாடி வருகின்றனர்.

BBL2020 Fans Slam New Big Bash League Rules X Factor Power Surge

இந்த மூன்று விதிகளில் பவர் சர்ஜ் என்பது முன்பு ஒருநாள் போட்டிகளில் ஐசிசியால் அறிமுகம் செய்யப்பட்டபோதும், தற்போது அந்த விதி மாற்றப்பட்டு கட்டாய பவர்பிளே மட்டுமே உள்ளது. அதைத் தவிர மீதமுள்ள 2 மாற்றங்களான 10 ஓவர்களில் எடுத்த ஸ்கோரை முந்துவது, மாற்று வீரரை ஆட வைப்பது போன்றவை உண்மையான கிரிக்கெட்டை அழிக்கும் எனவே ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் சிலர் அடுத்ததாக பிக் பாஷ் லீக் தொடரில் ஸ்ட்ரீட் கிரிக்கெட் போல கேலிக்குரிய விதிகளை அமல்படுத்தினாலும் ஆச்சரியமில்லை என கிண்டல் செய்து வருகின்றனர்.

 

 

மற்ற செய்திகள்