"காதலர் தின வாழ்த்துக்கள்".. ஆஸ்திரேலியாவின் ஆடம் ஸாம்பா & மார்க்கஸ் ஸ்டோய்னஸ்-ன் வைரல் PIC..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர்களான மார்க்கஸ் ஸ்டோய்னஸ் மற்றும் ஆடம் ஸாம்பா ஆகியோரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

"காதலர் தின வாழ்த்துக்கள்".. ஆஸ்திரேலியாவின் ஆடம் ஸாம்பா & மார்க்கஸ் ஸ்டோய்னஸ்-ன் வைரல் PIC..!

                       Images are subject to © copyright to their respective owners.

Also Read | லாட்டரியில் விழுந்த ரூ.12 கோடி.. EX-க்கு கிஃப்ட் கொடுக்கப்போய்.. மனைவியிடம் சிக்கிய கணவன்.. சோனமுத்தா மொத்தமும் போச்சா..

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான கதைகளும் இருக்கின்றன. ஆனால் பொதுவாக அன்றைய தினத்தில் காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று காதலர் தினம் உலகம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த சூழ்நிலையில் பிக்பாஷ் லீக் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரர்களான மார்க்கஸ் ஸ்டோய்னஸ் மற்றும் ஆடம் ஸாம்பா ஆகியோரின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

BB League shares Adam Zampa and Marcus Stoinis pic on Valentine Day

Images are subject to © copyright to their respective owners.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பா. ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரையில் 76 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 127 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 72 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஸாம்பா 82 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு டி20 லீக்குகளிலும் இவர் பங்கேற்று வருகிறார். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் தொடரில் இவர் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார் ஸாம்பா. 

BB League shares Adam Zampa and Marcus Stoinis pic on Valentine Day

Images are subject to © copyright to their respective owners.

இந்த சூழ்நிலையில் பிக்பாஷ் லீக் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு புகைப்படம் ஒன்றை நேற்று பகிர்ந்திருந்தது. அதில் ஆடம் ஸாம்பா மார்க்கஸ் ஸ்டோய்னசின் கன்னத்தில் முத்தமிடுகிறார். இந்த புகைப்படத்தை பகிர்ந்து," காதலர் தின வாழ்த்துக்கள்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான மார்க்கஸ் ஸ்டோய்னஸ்-ம் தற்போது பிக்பாஷ் லீக்கில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதனிடையே மார்க்கஸ் ஸ்டோய்னசை, ஆடம் ஸாம்பா முத்தமிடும் புகைப்படத்தை பிக்பாஷ் லீக் பகிர்ந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | துருக்கியை தொடர்ந்து நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. கலக்கத்தில் பொதுமக்கள்..!

CRICKET, BB LEAGUE, ADAM ZAMPA, MARCUS STOINIS, VALENTINE DAY

மற்ற செய்திகள்