கிரிக்கெட் வரலாற்றிலேயே மோசமான DRS ரிவ்யூ இதுதான் - வங்க தேசத்தை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்து உடனான டெஸ்ட் போட்டியின்போது வங்க தேச கேப்டன் கேட்ட DRS ரிவ்யூ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. கிரிக்கெட் வரலாற்றிலேயே மோசமான ரிவ்யூ இதுதான் என வங்கதேச வீரர்களை வைத்து செய்கிறார்கள் நெட்டிசன்கள்.
முதல் டெஸ்ட்
வங்கதேசம் – நியூசிலாந்து மோதும் முதல் டெஸ்ட் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி துவங்கி நடைபெற்றுவருகிறது. டாசை வென்ற வங்கதேசம் பவுலிங்கை தேர்வு செய்தது. நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 328 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனைத்தொடர்ந்து பேட்டிங் செய்த வங்கதேச வீரர்கள் ஆச்சர்யம் தரும் வகையில் விளையாடி 458 ரன்கள் குவித்தனர். இந்நிலையில் நியூசிலாந்து தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. அதில்தான் ஒரு மாபெரும் காமெடி நடந்திருக்கிறது.
நியூஸி. வீரர் ராஸ் டெய்லர் களத்தில் இருந்தபோது 37 வது ஓவரை வீசவந்தார் தஷ்கின் அகமது. அவர் வீசிய யார்க்கரை டெய்லர் டிஃபென்ஸ் ஆட, திடீரென தஷ்கின் அகமது LBW க்கு அப்பீல் செய்தார்.
காமெடியான அப்பீல்
நடுவர் அதெல்லாம் இல்லப்பா.. எனச் சொல்லிக்கொண்டிருந்த போதே வங்கதேச கேப்டன் மொமினுல் ஹக் DRS எடுப்பதாக அறிவித்தார். ஸ்லோமோஷனில் பந்து சென்ற விதத்தை மூன்றாம் நடுவர் ஆராய, பந்து முழுவதுமாக பேட்டில் மட்டுமே படுவதால் நாட் அவுட் என அறிவித்தார்.
இந்த ஸ்லோமோஷனைக்கண்ட வர்ணனையாளர்கள் விழுந்து விழுந்து சிரித்திருக்கின்றனர். இப்படியும் ஒரு ரிவியூ எடுக்கப்படுமா? என கிரிக்கெட் ரசிகர்கள் கலாய்த்துவருகின்றனர்..
நாளை முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்.. வரப்போகுது புதிய அறிவிப்பு
Bangladesh are doing so well this Test, but there should be some sort of penalty runs for this 😂pic.twitter.com/cc1gBUau4c
— Lachlan McKirdy (@LMcKirdy7) January 4, 2022
மற்ற செய்திகள்