VIDEO: இப்படியாய்யா சொதப்புவீங்க.. ‘ஒரே பந்தில் 7 ரன்’.. விழுந்து விழுந்து பந்தை விட்ட வீரர்கள்.. ‘செம’ வைரல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி ஒரே பந்தில் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

VIDEO: இப்படியாய்யா சொதப்புவீங்க.. ‘ஒரே பந்தில் 7 ரன்’.. விழுந்து விழுந்து பந்தை விட்ட வீரர்கள்.. ‘செம’ வைரல்..!

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வங்கதேச அணி வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியை அதன் சொந்த நாட்டிலேயே முதல்முறையாக வீழ்த்தி வங்கதேச அணி வரலாற்று சாதனை படைத்தது.

Bangladesh fielding error, give away 7 runs off 1 ball

இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சொந்த மண்ணில் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியதால் 2-வது போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என நியூசிலாந்து அணி முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 349 ரன்களை நியூசிலாந்து அணி எடுத்திருந்தது.

Bangladesh fielding error, give away 7 runs off 1 ball

இந்த நிலையில் இப்போட்டியில் வங்கதேச வீரர்கள் பீல்டிங்கில் சொதப்பிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் வில் யங் அடித்த பந்து ஸ்லிப் திசையை நோக்கி சென்றது. ஆனால் அங்கு நின்ற வீரர் பந்தை பிடிக்க தவறி விட்டார். அதனால் பந்து வேகமாக பவுண்டரி லைனை நோக்கி சென்றது. அதற்குள் பேட்ஸ்மேன்கள் 2 ரன்கள் ஓடிவிட்டனர்.

3-வது ரன் எடுக்க ஓடும்போது விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் எதிர்புற ஸ்டம்பை நோக்கி பந்தை வீசினார். ஆனால் அப்போது அங்கு நின்ற வீரர்கள் பந்தை தவறவிட்டதால், பந்து நேராக பவுண்டரிக்கு சென்றது. இதனால் ஒரே பந்தில் 7 ரன்களை வங்கதேச அணி விட்டுக் கொடுத்தது. வங்கதேச வீரர்கள் பீல்டிங்கில் சொதப்பிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

NZVBAN

மற்ற செய்திகள்