"இப்டி ஒரு மோசமான DRS பாத்ததே இல்ல.." பங்களாதேஷ் அணி முடிவால் ட்விட்டரில் குழம்பிய ரசிகர்கள்!!...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, அங்கே ஒரு நாள் போட்டி மற்றும் டி 20 தொடர்களில் ஆடுகிறது.
Images are subject to © copyright to their respective owners
மேலும், மூன்று ஒரு நாள் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வரும் சூழலில், இதுவரை இரண்டு ஒரு நாள் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலுமே இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி உள்ளது.
முதல் ஒரு நாள் போட்டியில் வங்காளதேச அணி நிர்ணயித்த 210 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி, டேவிட் மலானின் சதத்துடன் 49 வது ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்திருந்தது.
தொடரை வென்ற இங்கிலாந்து
இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து மற்றும் வங்காளதேசம் மோதி இருந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்திருந்த இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜேசன் ராய் 132 ரன்களும், கேப்டன் ஜோஸ் பட்லர் 76 ரன்களும் எடுத்திருந்தனர்.
தொடர்ந்து சற்று கடின இலக்கை நோக்கி ஆடி இருந்த பங்களாதேஷ் அணி, இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. 45 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பங்களாதேஷ் அணி, 194 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் இங்கிலாந்து அணி, 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.
Images are subject to © copyright to their respective owners
இங்கிலாந்து அணி தரப்பில் சாம் குர்ரான் மற்றும் ஆதில் ரஷீத் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தனர். மேலும் இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரையும் கைப்பற்றி அசத்தி உள்ளது. இதனிடையே, இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி கேப்டன் எடுத்த வினோத டிஆர்எஸ் தொடர்பான செய்தி ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
வினோத டிஆர்எஸ்
இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது மொயீன் அலி அவுட்டான சூழலில் ஆதில் ரஷீத் 48 வது ஓவரில் பேட்டிங் செய்ய வந்தார். அப்போது டஸ்கின் அகமது வீசிய யார்க்கர் பந்தை ஆதில் ரஷீத் சரியாக எதிர்கொள்ள, அது நேராக பேட்டின் அடிப்பகுதியில் பட்டது.
Images are subject to © copyright to their respective owners
ஆனால் பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்த சூழலில், பங்களாதேஷ் அணி எல்பிடபுள்யூ அப்பீல் செய்ததாக தெரிகிறது. நடுவர் அவுட் கொடுக்காத நிலையில், பங்களாதேஷ் அணி கேப்டன் தமிம் இக்பால் டிஆர்எஸ் எடுத்திருந்த விஷயம் தான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.
Images are subject to © copyright to their respective owners
தொடர்ந்து இது தொடர்பான வீடியோ ரீப்ளே பார்த்த சமயத்தில் பந்து கால் பேடிற்கு அருகே கூட எங்கேயும் இல்லை. அப்படி இருந்தும் பங்களாதேஷ் அணி டிஆர்எஸ் எடுத்த விஷயம் தான், தற்போது பலரையும் குழப்பம் அடைய வைத்துள்ளது.
What prize do Bangladesh get for making the worst LBW review call in the history of cricket? pic.twitter.com/SfJWRdCpXc
— Jon Reeve (@jon_reeve) March 3, 2023
மற்ற செய்திகள்