இதுதான்யா ‘டெஸ்ட்’ மேட்ச்.. ‘100 பந்துக்கு 6 ரன்’.. ஆஸ்திரேலியாவை ‘அலறவிட்ட’ இந்திய பேட்ஸ்மேன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

100 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே அடித்து நங்கூரம் போல நின்று ஆஸ்திரேலிய வீரர்களை இந்திய பேட்ஸ்மேன் சோதித்தார்.

இதுதான்யா ‘டெஸ்ட்’ மேட்ச்.. ‘100 பந்துக்கு 6 ரன்’.. ஆஸ்திரேலியாவை ‘அலறவிட்ட’ இந்திய பேட்ஸ்மேன்..!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 312 ரன்களும் எடுத்து 407 ரன்களை இந்தியா வெற்றி பெற இலக்காக நிர்ணயித்தது.

AUSvIND: Hanuma Vihari scored 6 runs off 100 balls

இதில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி விளையாடியது. இதில் அதிகபட்சமாக் ரிஷப் பந்த் 97 ரன்களும், புஜாரா 77 ரன்களும், ரோஹித் ஷர்மா 52 ரன்களும் எடுத்தனர்.

AUSvIND: Hanuma Vihari scored 6 runs off 100 balls

இதனை அடுத்து ஹனுமா விஹாரி மற்றும் அஸ்வின் ஜோடி பேட்டிங் செய்துது. இதில் விஹாரி, 100 பந்துகளில் வெறும் 6 ரன் மட்டுமே எடுத்து ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை சோதித்தார். முன்னதாக இங்கிலாந்து வீரர் ஜான் முராய் கடந்த 1963ம் ஆண்டு 100 பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி விஹாரி 161 பந்துகளில் 23 ரன்களும், அஸ்வின் 128 பந்துகளில் 39 ரன்களும் எடுத்து இருந்தனர். இந்திய அணி 334 ரன்கள் எடுத்திருந்தபோது போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது.

மற்ற செய்திகள்