அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்! பிரபல ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் திடீர் மரணம்…
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட் ரசிகர்கள், ஷேன் வார்ன் இறந்த துயரத்தில் இருந்து மீளுவதற்குள் அடுத்த மரண செய்தி வந்து சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மரண செய்தியோடு விடிந்த காலை…
கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்றைய காலைப் பொழுது மிகவும் மோசமான செய்தியோடு விடிந்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும், கிரிக்கெட் உலகில் அனைத்து நாடுகளிலும் ரசிகர்களைக் கொண்டவருமான ஆண்ட்ரூ சைமன்ஸ் நேற்று நள்ளிரவு ஒரு கார் விபத்தில் இறந்ததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இணையதளப் பக்கம் அறிவித்துள்ளது.
இது சம்மந்தமாக வெளியாகியுள்ள முதல் கட்ட தகவலில் ஆஸ்திரேலியாவின் டவுன்ஸ்வில்லி பகுதியில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள ஹெர்வி ரேஞ்ச் சாலையில் ஏற்பட்ட சைமண்ட்ஸின் கார் விபத்து குறித்து குயின்ஸ்லாந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் விபத்து….
விபத்து சம்மந்தமான போலீஸின் முதல் கட்ட அறிக்கையில் “இரவு 11 மணிக்குப் பிறகு கார் ஹெர்வி ரேஞ்ச் சாலையில், ஆலிஸ் ரிவர் பிரிட்ஜ் அருகே ஓட்டிச் செல்லப்பட்டு, சாலையை விட்டு வெளியேறி உருண்டதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது. மேலும் "அவசர கால முதலுதவி சேவைகள் 46 வயதான ஓட்டுநரை ( காரில் இருந்த ஒரே பயணியை) உயிர்ப்பிக்க முயற்சித்தன. இருப்பினும், அவர் காயங்களால் இறந்தார்." என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து நிகழ்ந்த சோகம்…
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன் இறந்து இரண்டு மாதங்களில் மற்றொரு முன்னாள் வீரர் இறந்திருப்பது ஆஸ்திரெலிய கிரிக்கெட் அணியையும் ரசிகர்களையும் வெகுவாகப் பாதித்துள்ளது. பலரும் தங்கள் இரங்கல்களையும் அஞ்சலிகளையும் சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றன.
இரண்டு உலகக்கோப்பைகளை வென்ற அணியில்…
ஆண்ட்ரு சைமண்ட்ஸ் ஆஸி அணிக்காக 1998 முதல் 2009 ஆம் ஆண்டு வரை விளையாடியுள்ளார். 26 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 198 ஒரு நாள் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். ஆஸி அணி உலகக்கோப்பையை வென்ற 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர்களில் அவர் முக்கிய வீரராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்