சிக்ஸ் லைன் அருகே.. 'ஸ்பைடர் மேன்' ஆக மாறிய 'பிரபல' வீரர்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் மெகா ஏலம் கடந்த இரு தினங்கள், பெங்களூரில் வைத்து மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.
பல இளம் வீரர்கள் மற்றும் சீனியர் வீரர்கள், இதுவரை இடம்பெறாத அணிகளில் தேர்வாகி, இந்தாண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ளனர்.
இரண்டாவது ஐபிஎல் ஏல தினமும், அதிக பரபரப்புடன் நடைபெற்று வர, இன்னொரு பக்கம், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையேயான டி 20 போட்டியும், மிக விறுவிறுப்புடன் நடைபெற்றிருந்தது.
டி 20 போட்டி
ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, அந்த அணிக்கு எதிராக, 5 டி 20 போட்டிகளில் ஆடி வருகிறது. இதன் முதல் போட்டியில், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி 20 போட்டி, நேற்று நடைபெற்றிருந்தது.
ஆஸ்திரேலிய அணி முன்னிலை
இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியும், 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்திருந்தது. போட்டி டிரா ஆனதால், பிறகு நடைபெற்ற சூப்பர் ஓவரில், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று, 2 - 0 என டி 20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.
ஒரே ஓவரில் 18 ரன்கள்
இதனிடையே, இலங்கை அணி பேட்டிங் செய்திருந்த போது, கடைசி ஓவரில் தான் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அந்த ஓவரில், இலங்கை அணியின் வெற்றிக்கு, 19 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டியோனிஸ் வீசிய ஓவரில், ஒரு சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுக்கப்பட்டிருந்தது. அப்போது, அந்த ஓவரின் நான்காவது பந்தை, இலங்கை வீரர் தீக்ஷனா சிக்சருக்கு விரட்டினார்.
ஸ்பைடர் மேன் ஸ்மித்
முதலில் பந்து சென்ற வேகத்துக்கு அனைவரும் சிக்ஸ் சென்று விட்டது என்றே நினைத்தனர். ஆனால், அங்கு ஃபீல்டிங் நின்ற ஸ்டீவ் ஸ்மித், அனைவரையும் மிரள வைக்கும் செயல் ஒன்றில் ஈடுபட்டார். சூப்பர் ஹீரோ மாதிரி பறந்து சென்று, பந்தினை ஸ்மித் தடுத்தார். இதனைக் கண்ட ரசிகர்கள், ஒரு நிமிடம் வாயடைத்து போயினர். ஆனால், அவர் தடுத்த பந்து, வெளியே வரும் போது, எல்லைக் கோட்டில் உரசியதால், சிக்ஸ் என அறிவிக்கப்பட்டது.
தலையில் காயம்
அதே வேளையில், இன்னொரு பக்கம், பந்தினை தடுத்த ஸ்மித், கீழே விழ, அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக, அங்கு வந்த மருத்துவக் குழு, ஸ்மித்துக்கு முதலுதவியினை மேற்கொண்டது. தொடர்ந்து, ஸ்மித்தின் உடல்நிலை சரியாக கொஞ்ச நாட்கள் ஆகும் என கூறப்பட்டுள்ளதால், இலங்கை அணிக்கு எதிரான டி 20 தொடரில் இருந்து அவர் விலகியதாகே அறிவிக்கப்பட்டுள்ளது.
சிக்ஸர் லைன் அருகே, ஸ்டீவ் ஸ்மித் செய்த சாகசமான செயல் தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
வானில் தோன்றிய மர்ம வெளிச்சம்.. கிருஷ்ணகிரி இளைஞர் கேட்ட கேள்வி.. கூலாக பதில் கொடுத்த இஸ்ரோ
மற்ற செய்திகள்