உடல்நலக் குறைவால்.. ‘கொரோனா’ பரிசோதனைக்குப் பின்... ‘தனிமைப்படுத்தப்பட்டுள்ள’ ஆஸ்திரேலிய ‘கிரிக்கெட்’ வீரர்...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கேன் ரிச்சர்ட்சன் உடல்நலக் குறைவால் கொரோனா பரிசோதனைக்குப் பின் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவிட்டு சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளது. இதையடுத்து அந்த அணி தற்போது நியூசிலாந்து அணியுடன் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன்னுக்கு திடீரென தொண்டை வலி ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு உடல்நலமும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே அவருடைய உடல்நலம் குறித்து தெரியவரும் எனக் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசியுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், “கேன் ரிச்சர்ட்சன்னுக்கு எங்களுடைய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்துள்ளனர். அதன்பிறகு அவர் அணியில் உள்ள மற்ற வீரர்களிடம் இருந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்” எனக் கூறியுள்ளது.