'அது மட்டும் உண்மையா இருந்தா'... 'இனிமேல் உங்க கூட விளையாடவே மாட்டோம்'... அதிரடியாக அறிவித்த ஆஸ்திரேலியா!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆப்கானிஸ்தான் விவகாரம் நாடுகளுக்குள் மட்டுமல்லாது கிரிக்கெட் போட்டியிலும் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது.

'அது மட்டும் உண்மையா இருந்தா'... 'இனிமேல் உங்க கூட விளையாடவே மாட்டோம்'... அதிரடியாக அறிவித்த ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் போட்டி நவம்பர் 27 முதல் ஆஸ்திரேலியாவின் தீவு மாகாணமான டாஸ்மேனியாவின் ஹோபார்ட்டில் உள்ள பெல்லரைவ் ஓவலில் நடைபெறவிருந்தது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Australia will cancel Afghanistan test if Taliban bans women's cricket

அதில், ''உலக அளவில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியை ஊக்குவிப்பது  ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் பணிகளில் இன்றியமையாத ஒன்றாகும். கிரிக்கெட் என்பது அனைவருக்குமான ஒரு விளையாட்டு என்பதோடு அதில் பெண்களுக்கான பங்களிப்பு என்பது முக்கியமானது என்பதை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி ஆதரிக்கிறோம்.

Australia will cancel Afghanistan test if Taliban bans women's cricket

ஆனால் ஆப்கானிஸ்தானில் மகளிர் கிரிக்கெட்டை ஆதரிக்க முடியாது என்று சமீபத்தில் ஊடகங்களில் வெளியான அறிக்கைகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், ஹோபார்ட்டில் ஆப்கானிஸ்தானுடன் நடைபெறவுள்ள அறிவிக்கப்பட்ட டெஸ்ட் போட்டியை ரத்து செய்வது தவிர கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு வேறு வழியில்லை'' என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிக்கையில் கூறியுள்ளது.

Australia will cancel Afghanistan test if Taliban bans women's cricket

முன்னதாக, தாலிபான் அரசின் கலாச்சார ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் அகமதுல்லா வாசிக், ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட் இஸ்லாமிய சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்