'தாறு மாறு... என்னா அடி'!.. இங்கிலாந்து அணியை கிழித்து தொங்கவிட்ட மேக்ஸ்வெல்!.. ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!.. தொடரையும் கைப்பற்றியது!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-க்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
மான்செஸ்டரில் நடைபெற்ற கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி திணறியது.
எனினும், பொறுப்பாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டவ் அணியை சரிவிலிருந்து மீட்டார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய பேர்ஸ்டவ் சதமடித்து அசத்தினார். 112 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை அவர் பறிகொடுத்தார். பின்வரிசையில் ஆடிய பில்லிங்க்ஸ், வோக்ஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 302 ரன்களை சேர்த்தது.
303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 73 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலிய அணிக்கு மேக்ஸ்வெல்லும், விக்கெட் கீப்பர் கேரியும் கைக்கொடுத்தனர்.
இருவரின் பொறுப்பான ஆட்டத்தால், அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. பவுண்டரியும், சிக்சர்களாக விளாசிய இருவரையும் பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் திணறினர். சிறப்பாக விளையாடிய இருவரும் சதமடித்து அசத்தினர். அணியின் ஸ்கோர் 285 ரன்களாக இருந்தபோது 108 ரன் எடுத்த மேக்ஸ்வெல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இருவரும் இணைந்து 6வது விக்கெட்டுக்கு 212 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தனர்.
எனினும், இரண்டு பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி, த்ரில் வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரையும் வென்றது.
மற்ற செய்திகள்