'நாம ஒன்னு நெனச்சா... அது ஒரு பக்கம் திரும்புது யா'!.. 'இதுக்கும் '2020'க்கும் ஏதாவது லிங்க் இருக்குமோ'?.. ஸ்டீவ் ஸ்மித் 'மூட் அவுட்'!.. தரமான சம்பவம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான கடந்த 17ம் தேதி துவங்கிய பகலிரவு டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியின் இரு இன்னிங்சிலும் ஸ்டீவ் ஸ்மித் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் இந்த போட்டியில் தான் விரும்பியபடி விளையாடவில்லை என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
கடந்த இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி பௌலிங்கில் ஸ்கெட்ச் வைத்து ஆஸ்திரேலியாவை தூக்கியது.
இதில் முக்கியமாக டேவிட் வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித்தை ஒரு ரன்னில் தூக்கி சாதனை படைத்தார் ஸ்பின்னர் ஆர். அஸ்வின். இது அந்த அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
இந்நிலையில் முதல் இன்னிங்சில் தான் நினைத்தபடி விளையாடவில்லை என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். மேலும், அஸ்வின் உலக தரத்திலான பௌலர் என்றும் அவர் சிறப்பாக பந்து வீசினார் என்றும் ஸ்மித் கூறினார். அஸ்வின் அதிகமான சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளதை சுட்டிக் காட்டிய ஸ்மித், தன்னுடைய அவுட் குறித்து பேசுகையில் இதுபோல நடப்பதை தவிர்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்காக பேசிய ஸ்மித், முதல் இன்னிங்சில் விராட் கோலி சிறப்பான ஆஸ்திரேலிய பௌலிங்கின் கீழ் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அவரது விக்கெட் வீழ்ந்தது துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்தார். மேலும், அவருடைய குழந்தை பிறப்பிற்காக அவருக்கும் அனுஷ்காவிற்கும் வாழ்த்துகளையும் கூறினார்.
மற்ற செய்திகள்