'இத விட பெரிய அவமானம் இருக்கவே முடியாது'!.. பயங்கர நெருக்கடியில் பெரிய தலைகள்!.. 'பறிபோகிறதா பதவி'?.. இந்திய அணியில் அடுத்தடுத்து செம்ம ஷாக்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மோசமான ஆட்டம் காரணமாக அணியை வழிநடத்தும் இரண்டு பேர் பெரிய சிக்கலுக்கு உள்ளாகி உள்ளனர்.

'இத விட பெரிய அவமானம் இருக்கவே முடியாது'!.. பயங்கர நெருக்கடியில் பெரிய தலைகள்!.. 'பறிபோகிறதா பதவி'?.. இந்திய அணியில் அடுத்தடுத்து செம்ம ஷாக்!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் மிக மோசமாக ஆடியது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

முதல் இன்னிங்சில் 244 எடுத்த இந்திய அணி அடுத்த இன்னிங்சில் வெறும் 36 ரன்கள் எடுத்து மிக மோசமான ஆட்டம் ஆடியது.

இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் இது மிக மோசமான ஆட்டமாக பார்க்கப்படுகிறது. முதல் இன்னிங்சில் 191 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி அடுத்த இன்னிங்சில் 2 விக்கெட்டில் 93 ரன்கள் எடுத்து வென்றது. 

australia test kohli ravi shasthri responsibility worst performance

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மோசமான ஆட்டம் காரணமாக அணியை வழிநடத்தும் இரண்டு பேர் பெரிய சிக்கலுக்கு உள்ளாகி உள்ளனர். ஒருவர் இந்திய அணியின் கேப்டன் கோலி என்று கூறப்படுகிறது. கோலி அணியை தேர்வு செய்த விதம் மிகவும் மோசமாக உள்ளது. 

இந்திய அணிக்குள் சிராஜ், சைனி, உமேஷ் யாதவ் போன்ற பெங்களூர் வீரர்களை கொண்டு வந்தது. சரியான பார்மில் இல்லாத மயங்க் அகர்வால் போன்ற வீரர்களை தனக்கு நெருக்கமான வீரர் என்பதால் அணிக்குள் கொண்டு வந்தது, ரோஹித் சர்மாவை புறக்கணித்தது என்று கோலி மீது கடுமையான புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது. 

australia test kohli ravi shasthri responsibility worst performance

இன்னொரு பக்கம் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வீரர்களுக்கு சரியாக பயிற்சி அளிப்பது இல்லை. வீரர்களை தனிப்பட்ட வகையில் கவனிப்பது இல்லை. இவரை உடனே மாற்ற வேண்டும் என்று புகார்கள் வைக்கப்படுகிறது. போட்டியின் போதே இவர் தூங்குகிறார் என்றும் புகார்கள் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு யார் காரணமாக இருந்தாலும் சரி, இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் இது மிகப்பெரிய அவமானம். இதனால் தற்போது ரவி சாஸ்திரி அல்லது கோலி இருவரில் ஒருவர் பதவி விலக வேண்டும் என்று கடுமையான கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. 

australia test kohli ravi shasthri responsibility worst performance

ரவி சாஸ்திரி அல்லது கோலி இருவரில் ஒருவர் தங்கள் தவறுகளுக்கு பொறுப்பேற்கவேண்டும். இருவரில் ஒருவர் பதவி விலக வேண்டும் என்று இணையத்தில் நெட்டிசன்கள் பலர் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர். பிசிசிஐ அமைப்பு இந்த மாதம் நடத்த உள்ள கூட்டத்திலும் இது பற்றி பேசப்படும் என்று கூறுகிறார்கள்.

 

மற்ற செய்திகள்