"அஸ்வின் -அ Face பண்ணியே ஆகணுமே".. டூப்ளிகேட் அஸ்வினை கையில் எடுத்த ஆஸ்திரேலியா.. "யாருப்பா இந்த பையன்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் டி 20 தொடரை சிறப்பாக முடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது.

"அஸ்வின் -அ Face பண்ணியே ஆகணுமே".. டூப்ளிகேட் அஸ்வினை கையில் எடுத்த ஆஸ்திரேலியா.. "யாருப்பா இந்த பையன்?

                         Images are subject to © copyright to their respective owners.

Also Read | "பாக்க கல்யாண டிரஸ் மாதிரி இருக்கும், ஆனா உண்மையில".. கின்னஸ் வரைக்கும் போன சம்பவம்!!..

4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் மற்றும் 3 ஒரு நாள் போட்டி தொடரை ஆடுவதற்காக ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு வந்துள்ளது.

இதில், முதலாவதாக டெஸ்ட் தொடர் ஆரம்பமாக உள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி, பிப்ரவரி 09 ஆம் தேதியன்று ஆரம்பமாகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வாய்ப்பு என்பது இந்தியா அணிக்கு இந்த டெஸ்ட் தொடரில் வெல்வது மூலம் தான் கைக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், வியூகம் போட்டு ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தவும் இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வருகிறது. முன்னதாக, 2018 - 19 ஆம் ஆண்டிலும், 2020 - 21 ஆம் ஆண்டிலும் ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்றிருந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்று வரலாறு படைத்திருந்தது.

Australia tactics to face ravichandran ashwin in test series

Images are subject to © copyright to their respective owners.

இதற்கடுத்து தற்போது நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் இந்திய அணியை வீழ்த்தவும் ஆஸ்திரேலியா அணி நிச்சயம் முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகமே இல்லை. மறுபக்கம், இந்திய மண்ணில் நடைபெறுவது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என கருதப்படும் சூழலில், ஆஸ்திரேலிய அணிக்கு இந்த தொடரும் சவால் நிறைந்ததாகவே இருக்கும். அதே போல, இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்து வீச்சும் ஆஸ்திரேலியா அணிக்கு அதிகம் நெருக்கடி கொடுக்கும்.

Australia tactics to face ravichandran ashwin in test series

Images are subject to © copyright to their respective owners.

அப்படி ஒரு சூழலில், அஸ்வினை போலவே பந்து வீசக்கூடிய இளம் இந்திய வீரரை கொண்டு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். பரோடா அணியில் அறிமுகமான மகேஷ் போதிய என்ற 21 வயது சுழற்பந்து வீச்சாளர், அப்படியே அஸ்வினை போன்று பந்து வீசக்கூடியவர். இதனால், மகேஷ் பிதியாவை கொண்டு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். மேலும், டெஸ்ட் தொடரிலும் அஸ்வின் பந்து வீச்சை எதிர்கொள்ள இந்த முறையை அவர்கள் கையாண்டு வருகின்றனர்.

Australia tactics to face ravichandran ashwin in test series

Images are subject to © copyright to their respective owners.

டெஸ்ட் தொடர் ஆரம்பமாக இன்னும் சில தினங்கள் இருக்கும் போதே அஸ்வின் பந்து வீச்சை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருவது பலரது கவனத்தையும் பெற்று.வருகிறது.

Also Read | "6 பந்தில் 6 சிக்ஸ்".. அரங்கையே திருப்பி பார்க்க வெச்ச கிரிக்கெட் வீரர்.. அடிச்சு முடிச்சதும் நடந்த வைரல் சம்பவம்!!

CRICKET, RAVICHANDRAN ASHWIN, TEST SERIES, AUSTRALIA

மற்ற செய்திகள்