பேட்டால் அடிக்க ஓங்கிய பாகிஸ்தான் வீரர்... களத்தில் சண்டை போட்ட வீரர்கள்.. உச்சகட்ட சர்ச்சை!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆசிய கோப்பை தொடர், ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள், சூப்பர் ஃபோர்ஸ் சுற்றில் நேற்று (07.09.2022) மோதி இருந்தது.
இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி, சிறிய இடைவெளியில் விக்கெட்டுகளை விழுந்த வண்ணம் இருந்தது. இதனால், போட்டிக்கு இடையே கடும் விறுவிறுப்பு உருவானது. இந்த போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்கும் முக்கியம் என்பதால், இரு நாட்டு ரசிகர்களும் உச்சகட்ட ஆவலில் இருந்தார்கள்.
12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்த போது, பாகிஸ்தான் அணி 9 ஆவது விக்கெட்டை இழந்தது. அப்படி இருக்கையில், கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 11 ரன்களும் தேவைப்பட்டது. இதன் முதல் இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு அனுப்பிய நசீம் ஷா, பாகிஸ்தான் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ததுடன் மட்டுமில்லாமல், இறுதி போட்டிக்கும் அழைத்து செல்ல உதவினார்.
இதனால், ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெற்ற நிலையில், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேறியது. இதனிடையே, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டிக்கு மத்தியில் நடந்த சம்பவம் ஒன்று, கடும் சர்ச்சையை உண்டு பண்ணி உள்ளது.
பாகிஸ்தான் பேட்டிங் செய்த 19 ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தில், ஆசிப் அலியை பரீத் அகமது அவுட்டாக்கினார். அந்த சமயத்தில் அவுட்டாகி வெளியேறிய ஆசிப் அலிக்கும் பந்து வீச்சாளர் பரீதுக்கும் இடையே வாக்குவாதம் உருவானது. மேலும் ஒரு படி மேலே சென்ற ஆசிப் அலி, பேட் எடுத்து பரீதை நோக்கி வீசவும் செய்தார்.
இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமில்லாமல், போட்டி முடிந்த பிறகு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மாறி மாறி மைதானத்தில் சண்டை போட்ட விஷயமும் அதிகம் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.
Also Read | ரயில் வரும்போது நடைமேடைக்கும் தண்டவாளத்திற்கும் இடையே சிக்கிய பயணி! அதிர்ஷ்டவசமாக தப்பிய நிமிடங்கள்
மற்ற செய்திகள்