ஸ்டாண்டிங்கே ஒரு தினுசா இருக்கே... பேட்டிங் அப்போ அஷ்வின் கொடுத்த போஸ்.. வைரல் புகைப்படம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி அணியுடனான நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் வீரர் அஷ்வின் வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலில் நின்றது பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
Also Read | முன்னாடி டிராகன் மீன்.. இப்போ இதுவா..? நெட்டிசன்களை நடுங்க வச்ச வினோத மீன்.. வைரலாகும் புகைப்படம்..!
டெல்லி Vs ராஜஸ்தான்
பரபரப்பாக நடைபெற்றுவரும் ஐபிஎல் 15 வது சீசனின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் டெல்லி கேப்பிடள்ஸும் களம் கண்டன. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடள்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 7 ரன்னிலும், மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 ரன்னிலும் ஆட்டமிழக்க ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன்பிறகு 3 வது விக்கெட்டுக்கு அஷ்வினும் தேவ்தத் படிக்கல்லும் இணைந்து சிறப்பாக ஆடி 53 ரன்களை சேர்த்தனர்.
நிதானமாக ஆடிய அஷ்வின் ஐபிஎல்-ல் தனது முதல் அரை சத்தத்தை பதிவு செய்தார். 50 ரன்கள் எடுத்த நிலையில் அஷ்வின் அவுட்டானார். அதனை தொடர்ந்து படிக்கல் 48 ரன்னில் வெளியேற, அதன் பிறகு வந்த ராஜஸ்தான் வீரர்கள் நிலைத்து ஆடாத காரணத்தினால் 20 ஓவரில் 160 ரன்கள் மட்டுமே எடுத்தது ராஜஸ்தான் அணி.
விளாசிய மார்ஷ்
இதனை தொடர்ந்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. துவக்க ஆட்டக்காரரான ஸ்ரீகர் பரத் டக்கில் வெளியேறினாலும் வார்னர் அபாரமாக ஆடி 52 ரன்கள் குவித்தார். அதன்பிறகு களத்திற்கு வந்த மிட்சல் மார்ஷ் சிறப்பாக விளையாடி 89 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இதனால் 18.1 ஓவர்களிலேயே டெல்லி அணி இலக்கை எட்டியது. இதன்மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.
வித்தியாசமான ஸ்டாண்டிங்
நேற்றைய போட்டியில் தனது முதல் ஐபிஎல் அரை சதத்தை பதிவுசெய்த அஷ்வின் பேட்டிங் செய்யும்போது, வித்தியாசமான பொசிஷனில் நின்றது பலரையும் புன்னகைக்க வைத்தது.
சற்றே குனிந்து தரைக்கு இணையாக பேட்டை பிடித்தவாறு அஷ்வின் நின்ற புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்