‘நினைவுப்படுத்திய ரசிகர்’... ‘வித்தியாசமாக மக்களை எச்சரித்து’... ‘பதிலுக்கு அஸ்வினின் மன்கட் மெசேஜ்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் மன்கட் முறையில் விக்கெட் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து கொரோனா பாதிக்காமல் இருக்க வீட்டிலேயே இருங்கள் மக்களை எச்சரித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

‘நினைவுப்படுத்திய ரசிகர்’... ‘வித்தியாசமாக மக்களை எச்சரித்து’... ‘பதிலுக்கு அஸ்வினின் மன்கட் மெசேஜ்'!

நாடு முழுவதும் இரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஐபிஎல் போட்டியின் போது ஜாஸ் பட்லரை மன்கட் முறையில் அவுட் செய்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “இந்த புகைப்படத்தை எனக்கு ஒருவர் அனுப்பினார். இந்த நிகழ்வு சரியாக ஒரு வருடத்திற்கு முன் நடந்தது. தற்போது நாடு முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில் இந்த புகைப்படம் சரியான உதாரணமாக இருக்கும். வெளியில் சுற்றாதீர்கள், வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் தனது ட்விட்டர் பெயரை lets stay indoors inida என மாற்றியுள்ளார். கிரிக்கெட்டில் க்ரீஸை விட்டு வெளியில் வந்தால் மன்கட் செய்யப்படுவீர்கள். அதேபோல் தற்போது வீட்டில் இருந்து வெளியே வந்தால் தண்டிக்கப்படுவீர்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்த ட்விட்டரை பதிவிட்டுள்ளார்.