"நான் இப்போ ரொம்ப 'சந்தோசமா 'ஃபீல்' பண்றேன்... ஆனாலும், அவருகிட்ட 'ஸாரி' கேட்டுக்குறேன்..." 'அஸ்வின்' உருக்கம்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங் செய்து வரும் நிலையில், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 134 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், இங்கிலாந்து அணி திணறியது. அதிலும் குறிப்பாக, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதன் மூலம், இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில், ஹர்பஜன் சிங்கை (265 விக்கெட்டுகள்) பின்னுக்கு தள்ளி விட்டு, அஸ்வின் (268 விக்கெட்டுகள்) இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
அனில் கும்ப்ளே 350 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்த சாதனை குறித்து பேசிய அஸ்வின், '2001 ஆம் ஆண்டில் ஹர்பஜன் சிங் ஆடுவதை சென்னையில் பார்த்திருக்கிறேன். அப்போது எல்லாம் நான் ஒரு ஆஃப் ஸ்பின்னராக உருவாகி, நாட்டுக்காக ஆடுவேன் என ஒரு போதும் நினைத்ததில்லை. அந்த சமயத்தில், பேட்ஸ்மேனாக ஆடுவதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் நான் ஹர்பஜன் சிங்கை போல பந்து வீசி முயற்சி செய்வதை நண்பர்கள் கேலி செய்வார்கள்.
அங்கிருந்து வந்து, அப்போது பார்த்து வளர்ந்த வீரர் செய்து வைத்துள்ள சாதனையை நான் இன்று முறியடித்துள்ளதை சற்று ஸ்பெஷலாக உணர்கிறேன். நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் ஹர்பஜன் சிங்கிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்' என அஸ்வின் கூறியுள்ளார். மொத்தமாக, 76 டெஸ்ட் மேட்ச்கள் ஆடியுள்ள அஸ்வின், அதில் 391 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்