“நானெல்லாம் அவ்ளோதான் காலி ஆய்ட்டேன்னு தான் நினைச்சேன்…”- பயத்தை பகிரும் அஸ்வின்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளார் அஸ்வின். வெற்றிக்களிப்பில் தற்போது விளையாடி வரும் அஸ்வின் கடந்த ஆண்டு தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து எவ்வளவு பயத்துடன் வாழ்ந்தார் என்பது குறித்துப் பேசியுள்ளார்.
கான்பூர் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதால் டெஸ்ட் போட்டிகளில் 418 விக்கெட்டுகளை வீழ்த்து உள்ளார். அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்களுள் இதுவரையில் 417 விக்கெட்டுகள் வீழ்த்தி 3-வது இடத்தில் இருந்த ஹர்பஜன் சிங்-ஐ பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தை அஸ்வின் பிடித்துள்ளார்.
அஸ்வின் இதுவரையில் 80 டெஸ்ட் போட்டிகளில் 418 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். ஹர்பஜன் சிங் 103 போட்டிகளில் 417 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்வினின் ஸ்டிரைக் ரேட் 52.4 ஆகவும் சராசரி 24.56 ஆகவும் உள்ளது. பந்துவீச்சில் மட்டுமல்லாது டெஸ்ட் பேட்டிங்-கிலும் அசத்தியுள்ள அஸ்வின் இதுவரையில் 2685 ரன்களை எடுத்துள்ளார்.
பிசிசிஐ-க்காக அஸ்வின் அளித்துள்ள பேட்டியில், “தற்போது என் வாழ்க்கையில் நடப்பது குறித்து சொல்வதென்றால் நான் இதை நினைத்தே பார்க்கவே இல்லை. கடந்த 2 ஆண்டுகளில் என் கிரிக்கெட் பயணம் இருந்த சூழலில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் தற்போது நான் டெஸ்ட் போட்டியில் விளையாடுவேன் என நினைத்துப் பார்க்கவில்லை.
இந்தியாவின் கடந்த க்றிஸ்ட்சர்ச் டெஸ்ட் போட்டியில் நான் பங்கேற்கவில்லை. அப்போது எல்லாம் இனிமேல் நான் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவேனா என யோசித்துப் பார்த்திருக்கிறேன். அவ்வளவு தான் என் கிரிக்கெட் வாழ்க்கை என பயந்துவிட்டேன். ஆனால், கடவுள் மிகுந்த கருணை உடன் என் கிரிக்கெட் பயணத்தை மாற்றிக் கொடுத்திருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்