‘சூரரைப்போற்று பார்த்தேன், சூர்யா நடிப்பு சூப்பர்’.. புகழ்ந்த பிரபல வீரர்.. அடுத்து ‘மாஸ்டர்’ படத்தை பரிந்துரை செய்த அஸ்வின்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சூரரைப் போற்று திரைப்படம் பார்த்ததாகவும், அதில் சூர்யா சிறப்பாக நடித்துள்ளதாகவும் இந்திய  கிரிக்கெட் வீரர் ரஹானே தெரிவித்துள்ளார்.

‘சூரரைப்போற்று பார்த்தேன், சூர்யா நடிப்பு சூப்பர்’.. புகழ்ந்த பிரபல வீரர்.. அடுத்து ‘மாஸ்டர்’ படத்தை பரிந்துரை செய்த அஸ்வின்..!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியை கேப்டனாக ரஹானே திறம்பட வழிநடத்தினார். விராட் கோலி இல்லாத சூழ்நிலையில் மெல்போர்ன், சிட்னி மற்றும் கப்பா என மூன்று மைதானங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அணியை சிறப்பாக வழிநடத்தியதோடு 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாற்று வெற்றி பெற்றுத்தந்தார்.

Ashwin refer Master movie to Rahane after he praises Soorarai Pottru

இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணி உடனான கிரிக்கெட் தொடருக்காக சென்னை வந்துள்ள ரஹானே, கொரோனா தனிமைப்படுத்துதலில் உள்ளார். அவரிடம் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர், ‘சென்னைக்கு உங்களை வரவேற்கிறேன். எதாவது தமிழ் சினிமா அல்லது சீரிஸ் பார்த்தீர்களா?’ எனக் கேள்வி எழுப்பினார்.

Ashwin refer Master movie to Rahane after he praises Soorarai Pottru

அதற்கு பதில் அளித்துள்ள ரஹானே, ‘ஆமாம். நான் சூரரைப் போற்று திரைப்படத்தை சப் டைட்டிலுடன் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. சூர்யா சிறப்பாக நடித்துள்ளார்’ என தெரிவித்தார்.

Ashwin refer Master movie to Rahane after he praises Soorarai Pottru

ரஹானேவின் இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும், தமிழகத்தை சேர்ந்தவருமான அஸ்வின், நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை பார்க்க ரஹானேவுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

முன்னதாக மாஸ்டர் திரைப்படத்தை புகழ்ந்து அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்