‘ஐபிஎல் தொடரில் இருந்து விலகுறேன்’!.. திடீரென அறிவித்த அஸ்வின்.. ‘அதிர்ச்சியில் ரசிகர்கள்’.. என்ன காரணம்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் இருந்து திடீரென விலகுவதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடிய தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

‘ஐபிஎல் தொடரில் இருந்து விலகுறேன்’!.. திடீரென அறிவித்த அஸ்வின்.. ‘அதிர்ச்சியில் ரசிகர்கள்’.. என்ன காரணம்..?

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும், தமிழகத்தை சேர்ந்தவருமான ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin), நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் (Delhi Capitals) அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி, 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னை சேப்பாக்கம் மற்றும் மும்பை வான்கடே மைதானங்களில் மட்டும் போட்டிகள் மாறிமாறி நடைபெற்று வந்த நிலையில் எஞ்சியுள்ள போட்டிகள் அகமதாபாத் மற்றும் டெல்லியில் நடைபெற உள்ளன.

Ashwin pulls out of IPL 2021 to help family fight against Covid19

இந்த நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சார்பாக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்ட அவர், ‘இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து நாளை முதல் நான் விடைபெறுகிறேன். கொரோனா வைரஸுக்கு எதிராக என் குடும்பம் போராடி வருகிறது. இந்த கடினமான நேரத்தில் அவர்களுடன் இருப்பது அவசியம். அனைத்தும் சரியானால் நான் மீண்டும் அணியின் இணைவேன் என எதிர்பார்க்கிறேன். டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு நன்றி’ என அஸ்வின் பதிவிட்டுள்ளார்.

இந்த கடினமான நேரத்தில் அஸ்வினுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுப்பதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகமும் தெரிவித்துள்ளது. முன்னதாக டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கிப் பாண்டிங் (Ricky Ponting), ‘இந்த ஐபிஎல் தொடரில் உள்ளே என்ன நடக்கிறது என்பதைவிட, வெளியே இருக்கும் நிலவரத்தைப் பற்றிய கவலைதான் அதிகமாக உள்ளது’ என கொரோனா பரவல் குறித்து கவலை தெரிவித்திருந்தார்.

Ashwin pulls out of IPL 2021 to help family fight against Covid19

ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) காயம் காரணமாக விலகினார். இதனை அடுத்து நீண்ட நாட்களாக பயோ பபுளில் இருப்பதால் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் என ராஜஸ்தான் அணியில் விளையாடிய லியாம் லிவிங்ஸ்டனும் (Liam Livingstone) விலகினார். அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹசில்வுட்டும் (Josh Hazlewood), இதே காரணத்தைக் கூறி ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்