Video : இந்தியன் 'டீம்' வரை சென்ற 'வாத்தி கம்மிங்'... 'அஸ்வினுடன்' சேர்ந்து ஆட்டம் போட்ட வீரர்கள்... "அட, யாரெல்லாம் ஆடுறாங்கன்னு பாருங்க..." 'வேற' லெவலில் ஹிட்டடித்த 'வீடியோ'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் வைத்து நடைபெற்று வருகிறது.

Video : இந்தியன் 'டீம்' வரை சென்ற 'வாத்தி கம்மிங்'... 'அஸ்வினுடன்' சேர்ந்து ஆட்டம் போட்ட வீரர்கள்... "அட, யாரெல்லாம் ஆடுறாங்கன்னு பாருங்க..." 'வேற' லெவலில் ஹிட்டடித்த 'வீடியோ'!!

இதில் முதலாவதாக டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளுக்கு பிறகு, 1 - 1 என தொடர் சமநிலையில் உள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகள் அகமதாபாத் மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது. முதல் இரண்டு போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றிருந்த நிலையில், இரண்டாவது போட்டிக்கு மட்டும் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்த போட்டியில், இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் என இரண்டிற்கும் சென்னை ரசிகர்கள் முழு ஆதரவு அளித்து ஆர்ப்பரித்த நிலையில், இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றிருந்தது. சென்னை மண்ணின் மைந்தனான அஸ்வின் ஆல் ரவுண்டராக அசத்தி, ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

முன்னதாக, இந்த போட்டியில், அஸ்வின் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த போது, நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் 'வாத்தி கம்மிங்' என்ற பாடலுக்கு சிறிதாக நடன அசைவுகள் செய்தார். சேப்பாக்கம் மைதானம் முழுவதும் இதனைக் கண்டு ஆரவாரம் செய்த நிலையில், இது தொடர்பான வீடியோ அதிகம் வைரலாகியிருந்தது.

 

இந்நிலையில், அதே 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு இந்திய வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருடன் இணைந்து அஸ்வின் நடனமாடியுள்ளார்.

இந்த வீடியோவும் தற்போது நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி, தற்போது இந்திய அணிக்குள் வரை நடிகர் விஜய்யின் பாடல் ஹிட்டடித்துள்ளதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

மற்ற செய்திகள்