“இந்த சின்ன விஷயம் உங்க கிரிக்கெட் கெரியரையே காலி பண்ணிடும்”.. பவுலர்களுக்கு அஸ்வின் கொடுத்த ‘முக்கிய’ அட்வைஸ்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐசிசி சமீபத்தில் கொண்டுவந்த புதிய விதிக்கு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

“இந்த சின்ன விஷயம் உங்க கிரிக்கெட் கெரியரையே காலி பண்ணிடும்”.. பவுலர்களுக்கு அஸ்வின் கொடுத்த ‘முக்கிய’ அட்வைஸ்..!

ஐசிசி

சர்வதேச கிரிக்கெட் வாரியம் அவ்வப்போது கிரிக்கெட்டில் சில விதிகளை மாற்றியும், திருத்தியும் வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் மான்கட் முறையில் பந்துவீச்சாளர் அவுட் செய்தால், அதை அதிகாரப்பூர்வ ரன் அவுட்டாக எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது. இதற்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அஸ்வின்

அதேபோல் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ள விதிமுறை பந்துவீச்சாளர்களை குறைத்து மதிப்பிடுவதாகும், பேட்ஸ்மேன்களை அவுட் செய்யுங்கள் என வெளிப்படையாக கூறுவதாகவும் பல வீரர்கள் நினைக்கின்றனர். இந்த தருணத்தில் நான் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். பந்து வீசுவதற்கு முன்பாக ஒரு பேட்ஸ்மேன் க்ரீஸை விட்டு நகர்ந்தால் அது உங்களின் கிரிக்கெட் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடும்.

மான்கட்

ஏனென்றால் நீங்கள் பந்து வீசுவதற்கு முன்பாகவே கூடுதலாக நகர்ந்து வேகமாக மறுமுனைக்கு சென்று விட்டால், அடுத்த பந்தில் அவர் சிக்சர் விளாசக்கூடும். அந்த சிக்சர் அடுத்த போட்டியில் இருந்து உங்களை நீக்க வழிவகுக்கலாம். இதே நீங்கள் அவரை அவுட் செய்தால் உங்களின் வாழ்க்கை காப்பாற்றப்படலாம். அந்த அளவுக்கு இது மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. யார் என்ன சொல்வார்கள் என பயப்படுவதை விட்டுவிட்டு இந்த புதிய விதிமுறையை தங்களுக்கு சாதகமாக பந்துவீச்சாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Ashwin gives advice to bowlers about Mankad rule change

ஐபிஎல்

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பாக விளையாடிய ஜாஸ் பட்லரை அஸ்வின் மான்கட் முறையில் அவுட் செய்தார். அது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் அஸ்வினை கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் விதிகளின் படியே தான் நடந்துகொண்டதாக அஸ்வின் விளக்கம் அளித்தார். தற்போது இந்த விதிமுறை அதிகாரபூர்வ ரன் அவுட்டாக மாற்றப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அஸ்வின் இடம்பெற்றுள்ளார். அதனால் ஜாஸ் பட்லரும், அஸ்வினும் ஒரே அணியில் விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்