என்னை அறிந்தால்.. அஸ்வின் & ஜடேஜாவை பத்தி வைரலான மீம் வீடியோ.. அஸ்வினின் ஜாலி கமெண்ட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா வென்றிருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் குறித்து மீம் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த வீடியோவில் அஸ்வின் கமெண்ட் செய்திருக்கிறார்.

என்னை அறிந்தால்.. அஸ்வின் & ஜடேஜாவை பத்தி வைரலான மீம் வீடியோ.. அஸ்வினின் ஜாலி கமெண்ட்..!

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | என்னை விட்டு போகாத.. மணப்பெண்ணின் சேலையை பிடித்து போராடிய பாசமான நாய்.. நெகிழ்ச்சி வீடியோ..!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரிலும், 3 ஒரு நாள் போட்டி தொடரிலும் இந்திய அணியை எதிர்கொள்கிறது. அந்த வகையில் இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, 177 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தனர். தொடர்ந்து, முதல் இன்னிங்சில் இந்திய அணி 400 ரங்களுக்கு ஆல் அவுட்டானது.

Ashwin comment in meme video after victory against australia

Images are subject to © copyright to their respective owners.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா சதம் விளாசி ரசிகர்களை பெருமகிழ்ச்சியில் ஆழத்தினார். இதனையடுத்து ஜடேஜா மற்றும் அக்சர் படேல் அரைசதம் எடுக்க இந்திய அணி வலுவான நிலையை எட்டியது. ஆஸ்திரேலிய அணியின் மர்பி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையும் படைத்திருந்தார்.

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கிய ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் 91 ரன்களுக்கு அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இரண்டாவது இன்னிங்க்ஸை பொறுத்தவரையில் இந்திய அணியின் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணியை வெற்றிபெற செய்திருந்தனர்.

Ashwin comment in meme video after victory against australia

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் பங்களிப்பை பாராட்டும் விதமாக மீம் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. என்னை அறிந்தால் படத்தின் 'அதாரு அதாரு' பாடல் காட்சிகளை முதல் டெஸ்ட் போட்டியுடன் ஒப்பிட்டு இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டிருந்தது. இந்த வீடியோவில் அஸ்வின் சிரிக்கும் எமோஜிக்களுடன் கமெண்ட் செய்து ஜடேஜாவையும் டேக் செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Also Read | போலீஸ் அதிகாரியா அப்பாவுக்கு சல்யூட் வச்ச மகள்.. பெருமையோடு அப்பா பகிர்ந்த வீடியோ..!

CRICKET, ASHWIN, ASHWIN COMMENT IN MEME VIDEO, AUSTRALIA

மற்ற செய்திகள்