‘அப்படி போடு’.. முதல்ல ஹர்பஜன் சிங், இப்போ நம்ம அஸ்வின்.. வேறலெவல் சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் தொடரில் சாதனை ஒன்றை தமிழக வீரர் அஸ்வின் படைத்துள்ளார்.

‘அப்படி போடு’.. முதல்ல ஹர்பஜன் சிங், இப்போ நம்ம அஸ்வின்.. வேறலெவல் சம்பவம்..!

Also Read | டுவிட்டர் ஓனராக எலான் மஸ்க் பதிவிட்ட ‘முதல்’ ட்வீட்.. என்ன சொல்லியிருக்கார் தெரியுமா? ‘செம’ வைரல்..!

ஐபிஎல் தொடரின் 39-வது லீக் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்தது.

இதில் அதிகபட்சமாக ரியான்பராக் 31 பந்தில் 56 ரன்கள் (3 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். பெங்களூரு அணியைப் பொறுத்தவரை முகமது சிராஜ், ஜோஸ் ஹசல்வுட் மற்றும் ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 115 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 29 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இதில் ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை குல்தீப்சென் 4 விக்கெட்டுகளும், தமிழக வீரர் அஸ்வின் 3 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இந்த நிலையில், இப்போட்டியில் 3 விக்கெட் எடுத்ததன் மூலம் சுழற்பந்து வீரர் அஸ்வின் ஐபிஎல் தொடரில் 150 விக்கெட்டை தொட்டு சாதனை புரிந்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் 150-க்கும் மேல் விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 8-வது இடத்தை அஸ்வின் பிடித்துள்ளார். அதேபோல் ஹர்பஜன் சிங்கிற்கு அடுத்து 150 விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது ஆப் ஸ்பின்னர் என்ற பெருமையும் அஸ்வின் பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ (181 விக்கெட்டுகள்) முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

CRICKET, RAVICHANDRAN ASHWIN, IPL, HARBHAJAN SINGH, அஸ்வின், ஹர்பஜன் சிங்

மற்ற செய்திகள்