"ஃபீல்டிங் பண்ண சொன்னா மனுஷன் என்னய்யா பண்ணி இருக்காரு ?".. பவுண்டரி லைனில் சாகசம் செய்த ஆஸி. வீரர்.. சர்ப்ரைஸ் வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவில் வைத்து நடந்த டி 20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்றி இருந்தது.
Also Read | 59 வயதில் விவாகரத்து கேட்ட தம்பதி.. 69 வயதில் மீண்டும் இணைந்த சுவாரஸ்யம்!!.. நெகிழ்ந்து போன நெட்டிசன்கள்
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேற்றம் கண்டிருந்தது. இந்த போட்டியில், பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி, இரண்டாவது முறையாக டி 20 உலக கோப்பையை கைப்பற்றி அசத்தி இருந்தது. முன்னதாக, 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் நடப்பு சாம்பியன் ஆகவும் இங்கிலாந்து அணி திகழ்வதும் குறிப்பிடத்தக்கது.
டி 20 உலக கோப்பை தொடர் முடிவடைந்துள்ள நிலையில், வெவ்வேறு நாடுகளில் கிரிக்கெட் தொடர்களும் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி 20 போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர்களில் மோத உள்ளது. இதில் முதலாவதாக டி 20 தொடர் நடைபெற உள்ள நிலையில், நாளை (18.11.2022) முதல் போட்டி நடைபெறுகிறது. அதே போல, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரும் இன்று ஆரம்பமானது.
இதன் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக டேவிட் மலான் 134 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி, 47 ஆவது ஓவரில் இலக்கை எட்டி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. டேவிட் வார்னர் 86 ரன்களும், டிராவிஸ் ஹெட் 69 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 80 ரன்களும் எடுத்திருந்தனர்.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய வீரர் ஆஷ்டன் அகர் செய்த ஃபீல்டிங் தொடர்பான வீடியோ, தற்போது பலரையும் மலைக்க வைத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 45 ஆவது ஓவரை பேட் கம்மின்ஸ் வீசி இருந்தார். அந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட டேவிட் மலான், தீப் மிட் விக்கெட் திசையில் அடித்தார்.
அவர் அடித்த அடிக்கு பந்து பவுண்டரி லைனை கடந்து சிக்ஸர் சென்று விடும் என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அப்பகுதியில் ஃபீல்டிங் நின்ற ஆஷ்டன் அகர், ஒரே நொடியில் மிகவும் உயரத்தில் தாவி பந்தை பிடித்து அற்புதமாக பவுண்டரி செல்லாமல் அதனை வெளியே வீசினார். நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு பவுண்டரி லைன் அருகே அற்புதம் செய்த ஆஷ்டன் அகரின் வீடியோ, சோஷியல் மீடியாவை கலக்கி வருகிறது.
That's crazy!
Take a bow, Ashton Agar #AUSvENG pic.twitter.com/FJTRiiI9ou
— cricket.com.au (@cricketcomau) November 17, 2022
மற்ற செய்திகள்