என்ன கேட்டீங்கன்னா அந்த '3 பேருமே' ரிஜெக்ட்...! 'கேப்டன்' ஆக 'பெர்ஃபெக்ட் சாய்ஸ்'னா அது 'அவரு' மட்டும் தான்...! அட, இது 'நம்ம லிஸ்ட்'லயே இல்லையே...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி தற்போது நடந்து வரும் டி-20 உலக கோப்பை தொடர் முடிவடைந்த பிறகு டி-20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
எனவே, அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டனாக யார் இருக்க போகிறார்? என்ற கேள்வி அனைவரின் எதிர்பார்ப்பாகவும்உள்ளது. இதுகுறித்து பல முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இந்த டி-20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் ஆகும் என்று கருத்தப்பட்ட நிலையில் சூப்பர் 12-சுற்றோடு இந்திய அணி நாடு திரும்ப உள்ளது. எனவே அடுத்த கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்கள் ? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இந்த நிலையில் அனுபவம் உள்ள வீரரான ரோஹித் சர்மா மற்றும் இளம் வீரர்களான ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் ஆகியோர் கேப்டன் பதவிக்கு நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பவுலரான ஆசிஷ் நெஹ்ரா இந்திய அணியின் அடுத்த கேப்டன் குறித்து தனது கருத்தினை கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் அவர் கூறும்போது, 'இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா பெயர் மட்டுமல்லாமல் கே.எல் ராகுல், பண்ட் போன்ற வீரர்களின் பெயர்கள் கூறப்படுகின்றன. ஆனால், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 என அனைத்து அணிகளிலும் விளையாடும் பும்ராவை ஏன் கேப்டனாக அறிவிக்கக் கூடாது? அவரே அடுத்த இந்திய அணியின் கேப்டன் பதவியை வகிக்க சரியானவர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், வேகப்பந்துவீச்சாளர் கேப்டன் ஆகக் கூடாது என்று சட்டம் எதுவும் இல்லையே? நிச்சயம் பும்ரா கேப்டனாக வேண்டும். அவருக்கு போட்டி குறித்த புரிதல் நிறையவே உள்ளது என்று கூறியுள்ளார். அவரது இந்த கருத்து வித்தியாசமாக இருந்தாலும் அனைவரையும் இந்த ஐடியா கூட நல்லா இருக்கே என யோசிக்க வைத்துள்ளது.
மற்ற செய்திகள்