"ஜெயிக்க வேண்டிய 'மேட்ச்'ல.. இப்டி தான் ஒரு தப்பான முடிவு எடுப்பீங்களா??.." 'அட' போங்கய்யா.." 'டெல்லி' அணியை விளாசிய 'நெஹ்ரா'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.
ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பிய போதும், ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் (Chris Morris), கடைசி இரண்டு ஓவர்களில் 4 சிக்ஸர்கள் விளாசி, ராஜஸ்தான் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். இந்த போட்டியை, தங்களது கட்டுப்பாட்டில் வைத்து, முக்கிய விக்கெட்டுகளை டெல்லி அணி வீழ்த்திய போதும், கடைசியில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசத் தவறினர்.
அதிலும், குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் (Ashwin), 3 ஓவர்கள் பந்து வீசி, 14 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். அவருக்கு இன்னும் ஒரு ஓவர் மீதமிருந்த போதும், டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் (Rishabh Pant), அவரை பந்து வீச வாய்ப்பு வழங்கவில்லை. அப்படி அவர் வீசியிருந்தால், ஏதேனும் விக்கெட்டுகள் விழ வழி செய்திருக்கலாம்.
இந்நிலையில், டெல்லி அணியின் முடிவு குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆசிஷ் நெஹ்ரா (Ashish Nehra) விமர்சனம் செய்துள்ளார். '148 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி, 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த சமயத்தில், மில்லர் மற்றும் ராகுல் டெவாட்டியா ஆகியோர் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர்.
இந்த சமயத்தில், டெல்லி அணி, அஸ்வினை பந்து வீச செய்திருக்க வேண்டும். சாம்சன் அல்லது ரியான் ஆகியோர் பேட்டிங் செய்திருந்தால், அஸ்வின் பந்து வீசியிருக்க வேண்டாம். ஆனால், இவர்கள் களத்தில் இருந்த போது, ஸ்டியோனிஸ்ஸை பந்து வீச வைத்ததற்கு பதிலாக, அஸ்வினைத் தான் பந்து வீசச் செய்திருக்க வேண்டும்.
அஸ்வின் பந்து வீசியிருந்தால், நிச்சயம் அந்த ஓவரில் விக்கெட்டுகள் ஏதேனும் எடுத்திருப்பார். இதனால், டெல்லி அணி, எளிதில் வெற்றி பெற்றிருக்கும்' என அஸ்வினுக்கு பந்து வீச வாய்ப்பு கொடுக்காததால் தான், டெல்லி அணி தோல்வி அடைய நேரிட்டது என ஆசிஷ் நெஹ்ரா விமர்சனம் செய்துள்ளார்.
முன்னதாக, டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூட, அஸ்வினுக்கு பந்து வீச வாய்ப்பு கொடுக்காதது, தாங்கள் செய்த தவறு என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்