பும்ராவ எல்லாம் 'அவரு' தாண்டியாச்சு...! எத்தனை வேரியேசன்ல பவுலிங் போடுறாரு...! பிட்னஸ் மட்டும் பார்த்துக்கிட்டாருன்னா 'அவர் லெவலே' வேற...! இளம் இந்திய வீரரை மனதார புகழ்ந்து தள்ளிய நெஹ்ரா...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா உலகளவில் சிறந்த பவுலராக திகழ்ந்து வருகிறார். இவர் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்.
பும்ரா பந்து வீச்சில் பல சாதனைகளை படைத்து வருபவர், பும்ராவின் பந்தை எதிர்கொள்ள பேட்ஸ்மன்கள் முட்டி மோதுவார்கள். ரன்கள் அடிப்பதற்கு படாத பாடு படுவதை நாம் தினம் காணலாம். இவர் இதுவரை 19 டெஸ்ட், 67 ஒருநாள் மற்றும் 49 டி20 சர்வதேச போட்டிளில் இந்தியா அணிக்காக அட்டகாசமாக தனது பங்களிப்பை செலுத்தியுள்ளார்.
இந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியா தொடரில் அறிமுகமாகிய ஆர்சிபி வீரர் முகமது சிராஜ் வேற லெவலில் பவுலிங் எடுபடுவதால் அவரை அனைவரும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
இந்த வருட ஐபிஎல் சீசனிலும் மிரட்டலாக பந்துவீசி வருகிறார். இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 4 லீக் ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார். இதில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். குறிப்பாக ராஜஸ்தானுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் முகமது சிராஜ் மொத்தம் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் பட்லர், மில்லர், திவாட்டியா என மூன்று முக்கியமான விக்கெட்டுகளை தகர்த்தெறிந்தார்.
இதன்காரணமாக அனைவரும் சிராஜை பாராட்டி தள்ளினர். அப்படியாக இந்திய அணியின் முன்னாள் பவுலர் ஆஷிஷ் நெஹ்ரா சிராஜை பாராட்டி மனதார பாராட்டியுள்ளார். சிராஜ் பற்றி கூறும்போது “பும்ராவை விட முகமது சிராஜ் திறமையானவராக மாறிவிட்டார். சிராஜ் இந்திய அணிக்காக மூன்று வடிவ போட்டிகளிலும் தன் திறமையை நிருபித்து பந்து வீசியிருக்கிறார். பவுலிங் திறனில் முகமது சிராஜ் பும்ராவுக்குப் பின்னால் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
முகமது சிராஜ் மிகவும் திறமையானவராக இருக்கிறார். பந்து வீச்சில் பல வேறுபாடுகளை காட்டுகிறார். இவர் தனது உடல்ரீதியான பிட்னஸில் முழு கவனம் செலுத்தினால் மட்டுமே போதும். அவர் எங்கையோ போய் விடுவார்” என்று தெரிவித்துள்ளார்
மற்ற செய்திகள்