RIP Yora Tade: "23 வயசுதான்" .. பிரபல அருணாசல குத்துச்சண்டை வீரர் சென்னையில் மரணம்.! பெரும் சோகம்.
முகப்பு > செய்திகள் > விளையாட்டு23 வயதேயான பிரபல அருணாசலப் பிரதேச வீரர் யுரா தாடே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.
சென்னையில் "WAKO INDIA NATIONAL KICK BOXING CHAMPIONSHIP-2022" எனும் தேசிய குத்துச்சண்டை (கிக் பாக்ஸிங்) சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா முழுவதும் இருந்தும் பல வீரர்கள் வந்து கலந்துகொண்டு தங்கள் திறமைகளை நிரூபித்து வருகின்றனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த வீரர் தான் 23 வயது ஆன கிக் பாக்ஸிங் வீரர் யுரா டாடே.
இவர் மகாராஷ்டிரா வீரர் ஒருவரை இந்த போட்டியில் எதிர்கொள்ளும்போது ஏற்பட்ட காயம் காரணமாக சென்னையின் தனியார் மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அங்கிருந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இவர் உயிரிழந்துள்ளார்.
இவரது பிரேதத்தை பார்வையிட்ட, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், மருத்துவ மனையில் வைக்கப்பட்டிருந்த அவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வந்து உயிரிழந்த அருணாசல வீரரின் இந்த பரிதாப நிலை தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also Read | காதலி சொன்ன ஒரே வார்த்தை.. ஒரு வருசத்துல 70 கிலோ குறைத்த வாலிபர்.. சில்லறையை சிதற விட்ட நெட்டிசன்கள்!!
மற்ற செய்திகள்