'சச்சின் பையன்னா ஒண்ணும் சொல்ல கூடாதா?'...'20 லட்சம்னா சும்மா இல்ல'... 'சரி, அந்த மனுஷன் எவ்வளவு வேதனை படுவாரு'?... கொந்தளித்த ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஎப்போதுமே அதிரடி காட்டும் மும்பை அணி இந்த ஐபிஎல் சீசனில் சொதப்பி வருவது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
கொரோனா காரணமாகத் தடைப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், தற்போது ஆட்டங்கள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல அனைத்து அணிகளும் கடுமையாகப் போராடி வரும் நிலையில் சென்னை அணி முதல் ஆளாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இதற்கிடையே 14ஆவது சீசனில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை 20 லட்சம் கொடுத்து மும்பை அணி ஏலத்தில் எடுத்தது. இவருக்கு இது முதல் சீசன் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகனின் ஆட்டம் எப்படி இருக்கும் என்பது தான் அந்த எதிர்பார்ப்புக்குக் காரணம்.
ஆனால் அவர் எந்த போட்டியிலும் களமிறக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் காயம் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் 14ஆவது சீசனிலிருந்து விலகி விட்டதாக மும்பை அணி நிர்வாகம் அறிவித்திருந்தது. மேலும் இவருக்கு மாற்றாகப் புதுமுக வீரர் சமர்ஜீத் சிங் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இது ஒரு புறம் இருக்க அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை அணி ஏலத்தில் எடுக்கும் போதே பல கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சித்தார்கள். சச்சினின் மகன் என்பதற்காக இவ்வளவு சலுகையா எனவும் கிண்டல் அடித்திருந்தார்கள். சரி, அவரை அணியில் எடுத்து விட்டீர்கள், ஆனால் எந்த போட்டியிலும் களமிறக்காமல் வைத்துள்ளீர்களே, களத்தில் அவர் எப்படி ஆடுவார் என்பதை எப்படி அறிந்து கொள்வது என ரசிகர்கள் பலரும் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டி வந்தார்கள்.
ஆனால் காயம் காரணமாக அர்ஜுன் டெண்டுல்கர் விலகியிருப்பதை ரசிகர்கள் பலரும் கிண்டல் அடித்து வருகிறார்கள். இது தொடர்பாகப் பலரும் மீம்ஸ்களை பறக்க விட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் இதுபோன்ற தருணங்களில் வீரர்களைக் கிண்டல் அடிப்பது முறையல்ல, அவர்களின் மன நிலையை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
Simarjeet Singh will be replacing Arjun Tendulkar for the remainder of #IPL2021 in #MI.
— Johns. (@CricCrazyJohns) September 29, 2021
Talent wins over nepotism
— 🇮🇳KING KOHLI (@Doc_Cricketer) September 29, 2021
For god sake don’t troll Arjun Tendulkar now 🙏🏻 even he is a human and can get injured
— Himanshu (@himanshu_jain12) September 29, 2021
மற்ற செய்திகள்