VIDEO : 'போட்டி'க்கு மத்தியில்... மோதிக் கொண்ட 'வீரர்'கள்... மைதானத்தில் நடந்த பரபரப்பு 'சம்பவம்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி அசத்தல் வெற்றி பெற்றது.

VIDEO : 'போட்டி'க்கு மத்தியில்... மோதிக் கொண்ட 'வீரர்'கள்... மைதானத்தில் நடந்த பரபரப்பு 'சம்பவம்'!!!

இந்த போட்டியில் முதலில் ஹைதராபாத் அணி தான் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டெவாட்டியா மற்றும் பராக் சிறப்பாக ஆடி ராஜஸ்தான் அணியை வெற்றி பெறச் செய்தனர். முன்னதாக, இந்த போட்டியின் இறுதி ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது.

 

அப்போது கலீல் அகமது பந்து வீசிய நிலையில், டெவாட்டியா மற்றும் கலீல் அகமது ஆகியோருக்கு இடையில் ஏதோ மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், போட்டி முடிந்த பின்னர் இருவரும் மாறி மாறி கோபப்பட்டு ஏதோ பேசிய நிலையில், உடனடியாக ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் மற்றும் போட்டி நடுவர்கள் டெவாட்டியாவை சமாதானப்படுத்தினர். 

 

இறுதியில் போட்டி முடிந்த பின்னர், டெவாட்டியாவின் தோள் மேல் கை போட்டு கலீல் பேசிக் கொண்டே இருவரும் சமாதானமாக மைதானத்தில் இருந்து கிளம்பிச் சென்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. 

மற்ற செய்திகள்