அவுட் ஆனதால் விரக்தி.. மோதலில் ஈடுபட்ட கே எல் ராகுல்.. மைதானத்தில் நிலவிய பரபரப்பு

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென்னாப்பிரிக்கா : மைதானத்தில் வைத்து இந்திய கேப்டன் கே எல் ராகுல், தென்னாப்பிரிக்க வீரர்களிடம் வாய்த் தகராறில் ஈடுபட்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுட் ஆனதால் விரக்தி.. மோதலில் ஈடுபட்ட கே எல் ராகுல்.. மைதானத்தில் நிலவிய பரபரப்பு

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 202 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி 229 ரன்களும் எடுத்திருந்தது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர், 7 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்திருந்தார்.

ஃபார்முக்கு வந்த புஜாரா, ரஹானே

இதனைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி ஆடி வருகிறது. தொடக்க வீரர்களான ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில், கடும் விமர்சனத்துக்குள் ஆன சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

arguement between kl rahul and sa players after rahul dismissal

வாய்த் தகராறு

இருவரும் அரை சதமடித்து அசத்திய நிலையில், புஜாரா 53 ரன்களிலும், ரஹானே 58 ரன்களிலும் அவுட்டாகினர். இவர்களின் விக்கெட்டிற்கு பிறகு, சிறிய இடைவெளியில் இந்திய அணியின் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் உள்ளன. இதனிடையே, இந்திய கேப்டன் கே எல் ராகுல், தென்னாப்பிரிக்க வீரர்களிடம் வாய்த் தகராறில் ஈடுபடும் வீடியோ ஒன்று வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

arguement between kl rahul and sa players after rahul dismissal

சர்ச்சை விக்கெட்

இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை, கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் தொடங்கினர். இதில், மார்கோ ஜென்சன் ஓவரில், ஸ்லிப்பில் நின்ற மார்க்ரமிடம் கேட்ச் கொடுத்து ராகுல் அவுட்டானார். முன்னதாக, பந்து மார்க்ரமின் கைக்குள் செல்வதற்கு முன்பாக, தரையில் பட்டது போலவும் தோன்றியது.

arguement between kl rahul and sa players after rahul dismissal

இதனால், முடிவு மூன்றாம் நடுவருக்கு மாற்றப்பட்டது. இருந்த போதும், தெளிவான முடிவைப் பெற முடியவில்லை. ஆனால், ராகுல் அவுட் என இறுதியில் அறிவிக்கப்பட்டது. இதனால், ராகுலின் விக்கெட்டை தென்னாப்பிரிக்க வீரர்கள் கொண்டாடத் தொடங்கினர்.

விரக்தியில் ராகுல்

அவுட் என அறிவிக்கப்பட்டதால், விரக்தியில் நடந்து சென்ற கே எல் ராகுல், தென்னாப்பிரிக்க வீரர்களிடம் ஏதோ கோபத்தில் பேசியுள்ளார். பதிலுக்கு அந்த அணியைச் சேர்ந்த வீரர்களும், ராகுலிடம் ஏதோ  தெரிவித்துள்ளனர். சில வினாடிகள் நடந்த இந்த வாய்த் தகராறால், மைதானத்தில் பரபரப்பு நிலவியது.

 

 

தொடரும் தவறுகள்

முன்னதாக, தென்னாப்பிரிக்க வீரர் வெண்டர் டுசன், ஷர்துல் தாக்கூர் பந்து வீச்சில் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது, பந்து தரையில் பட்டு, பின்னர் ரிஷப் பண்ட்டின் கைக்குள் செல்வது போல இருந்தது. ஆனால், நடுவர் அவுட் என அறிவித்ததும் அப்பீல் கூட செய்யாமல், வெண்டர் டுசன் கிளம்பி விட்டார்.

ரீப்ளேயில் அவுட்டில்லை என தெரிந்ததும், தென்னாப்பிரிக்க டீன் எல்கர், போட்டி நடுவர்களிடம் இதுகுறித்து முறையிட்டார். இந்த சம்பவமும், அதிகம் பரபரப்பை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

KL RAHUL, IND VS SA, DEAN ELGAR

மற்ற செய்திகள்