RRR Others USA

பேட்ஸ்மேன்கள் வயிற்றில் புளியை கரைக்கும் பவுலர் திரும்ப வரார் போலயே.. டெல்லி அணிக்கு ஜாலியோ ஜிம்கானா தான்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் மீண்டும் ஐபிஎல் தொடரில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேட்ஸ்மேன்கள் வயிற்றில் புளியை கரைக்கும் பவுலர் திரும்ப வரார் போலயே.. டெல்லி அணிக்கு ஜாலியோ ஜிம்கானா தான்..!

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வரும் 26-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. அதனால் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே காயம் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் சிலர் தொடர்ந்து விலகி வருவது ஐபிஎல் அணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதில் குறிப்பாக டெல்லி அணியில் இடம்பெற்றிருக்கும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜேவுக்கு காயம் ஏற்பட்டது டெல்லி அணிக்கு பின்னடைவாக கருதப்பட்டது.

இந்த நிலையில் அவர் மீண்டும் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் 20-ம் தேதி அவர் மும்பைக்கு வந்து விட்டதாகவும், தற்போது பயோ பபுளில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் முதல் சில போட்டிகளில் மட்டுமே தவறு விட உள்ளார் என்றும், ஏப்ரல் 7-ம் தேதியில் இருந்து மீண்டும் அணியில் இடம் பிடித்து விளையாடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Anrich Nortje set to return for Delhi Capitals: Reports

ஐபிஎல் தொடரின் கடந்த 2 சீசன்களில் தனது பந்துவீச்சின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அன்ரிச் நார்ட்ஜே பயத்தைக் காட்டினார். ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக பந்து வீசிய வெளிநாட்டு வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டில் அதிவேகமாக பந்து வீசிய முதல் 5 இடத்தில் அன்ரிச் நார்ட்ஜேதான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி அணி அன்ரிச் நார்ட்ஜேவை ரூ. 6.5 கோடிக்கு தக்க வைத்தது. காயத்தால் கடந்த நவம்பர் மாதம் முதல் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் அன்ரிச் நார்ட்ஜே விளையாடாமல் இருந்து வந்தார். அதனால் ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பு இல்லை என கூறப்பட்டது. இந்த சூழலில் அவர் மீண்டும் ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது டெல்லி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

IPL, ANRICHNORTJE, DELHICAPITALS, IPL2022

மற்ற செய்திகள்