கார் விபத்தில் சைமண்ட்ஸ் கூட இருந்த நாய்.. "அவர பாத்ததும் உடனே இத தான் பண்ணுச்சு.." விபத்து நடந்த போது அருகே இருந்தவரின் பரபர வாக்குமூலம்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பிரபல முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம், பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
Also Read | "ரிட்டையர் ஆகுற எண்ணமே வரல".. இளைஞர்களுக்கே Tough கொடுக்கும் இரண்டாம் உலகப்போர் வீரர்..!
இதனிடையே, விபத்து நடந்த நேரத்தில் அருகே இருந்த இரண்டு பேர், இது பற்றி தெரிவித்துள்ள கருத்தும் தற்போது அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக, மொத்தம் 198 ஒரு நாள் போட்டிகளிலும், 26 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடி உள்ளவர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். சர்வதேச போட்டிகளில் தான் ஆடிய சமயத்தில், மிகப் பெரிய ஆதிக்கத்தையும் சைமண்ட்ஸ் செலுத்தி இருந்தார்.
கார் விபத்தில் சிக்கிய சைமண்ட்ஸ்
தனது ஓய்வுக்கு பிறகும், கிரிக்கெட் வர்ணனையில் சைமண்ட்ஸ் ஈடுபட்டு வந்தார். அப்படி ஒரு சூழ்நிலையில், ஆஸ்திரேலியாவில் தனது வீடு இருக்கும் பகுதியில் இருந்து, சுமார் 50 கி. மீ தொலைவில் உள்ள ஹெர்வி ரேஞ்ச் என்னும் பகுதியில் வைத்து வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தனது நாய்களுடன் காரில் தனியாக பயணம் மேற்கொண்ட சைமண்ட்ஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தி இருந்தது.
அவருடன் ஆடிய வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் என பலரும் ஜாம்பவான் சைமண்ட்ஸ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து, சைமண்ட்ஸ் மரணம் தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர். அதே போல, சைமண்ட்ஸ் கார் விபத்து நடந்த பகுதியில், சிசிடிவி கேமரா எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
நடந்தது என்ன?
இந்நிலையில், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் சிக்கிய போது, அப்பகுதியில் இருந்தவர்கள் விபத்து நிகழ்ந்த போது என்ன நடந்தது என்பது பற்றி, என்ன தெரிவித்தார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. "சைமண்ட்ஸ் இருந்த காரில் அவருடன் இரண்டு நாய்கள் இருந்தது. அதில் ஒரு நாய் மிகவும் உணர்ச்சிமிக்கதாக இருந்தது. அவரை விட்டு விலகவும் விரும்பவில்லை. நானும், என்னுடன் இருந்தவரும் சைமண்ட்ஸை நகர்த்த அல்லது அருகே செல்ல முயற்சித்த போது, அந்த நாய் எங்களை பார்த்து உருமிக் கொண்டே இருந்தது.
மேலும், சைமண்ட்ஸை காரில் இருந்து வெளியே எடுக்க பார்த்தோம். அவர் மயக்கத்தில் இருந்தார். மேலும், எதுவும் பதில் அளிக்காமல் அவர் இருந்தார். பல்ஸ் துடிப்பும் அவரிடம் இல்லை" என பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சைமண்ட்ஸை காப்பாற்றும் முயற்சிகளில் அவர் இறங்கவும் செய்து, அது முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது. அவருடன் இருந்த இரண்டு நாய்களுக்கு எதுவும் ஆகவில்லை என்றும் தெரிகிறது.
கடந்த மூன்று மாதத்தில், ரோட் மார்ஷ், ஷேன் வார்னே மற்றும் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஆகிய மூன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்