'அவரு மாதிரிலாம் சிக்ஸர் அடிக்க ஆளே இல்ல...' 'இன்னிக்கு தேதிக்கு World நம்பர் 1 ஆல்-ரவுண்டர் அவர் தான்...' ரிங்கு சிங் புகழாரம்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல்தான் உலகின் நம்பர் 1 ஆல் ரவுண்டர் எனக் கொல்கத்தா அணியைச் சேர்ந்த ரிங்கு கிங் புகழ்ந்துள்ளார். மேலும், அவர் தனக்கும் ரஸ்ஸலுக்கும் இடையே மலர்ந்த நல்ல நட்பு பற்றி பேட்டி அளித்துள்ளார். ரிங்கு சிங் 2018-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட்டில்  கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார்.

'அவரு மாதிரிலாம் சிக்ஸர் அடிக்க ஆளே இல்ல...' 'இன்னிக்கு தேதிக்கு World நம்பர் 1 ஆல்-ரவுண்டர் அவர் தான்...' ரிங்கு சிங் புகழாரம்...!

இதற்கிடையே கொல்கத்தா அணியில் ரிங்கு சிங், மேற்கிந்திய அணியை சேர்ந்த ரஸ்ஸல் இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறியுள்ளதாக தற்போது செய்தி வெளியே கசிந்தது. இந்த  நிலையில் தற்போது அளித்துள்ள  பேட்டியின் மூலம் ரிங்கு அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ரிங்கு சிங் இதுபற்றி தெரிவிக்கையில், “நான் அவருடன் அதிகம் பேசியதில்லை. ஏனெனில் எனக்கு ஆங்கிலம் சுமாராக தான் தெரியும். 2018-ஆம் ஆண்டு அவருடைய பிறந்தநாளை எங்களுடைய ரூமில் கொண்டாடினோம். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருந்தோம். அப்போதிலிருந்து நானும் ரஸ்ஸலும் நல்ல நண்பர்களாக மாறிவிட்டோம்” என்றார்.

ரஸ்ஸல் பேட்டிங் திறமை பற்றி பேசியபோது, “உலகின் நம்பர் 1 ஆல்-ரவுண்டராக ரஸ்ஸல்தான் உள்ளார். இவரைப் போல் யாராலும் சிக்ஸர் அடிக்க முடியாது. மிகவும் திறமைசாலியாக இருக்கிறார்.

அவருக்கு இணையாக யாரையும் ஒப்பிட முடியாது. தற்போது வரை உலகின் நம்பர் 1 ஆல்-ரவுண்டராக ரஸ்ஸல் மட்டுமே இருக்கிறார்” எனக் குறிப்பிட்டார்.

கொல்கத்தா அணியில் விளையாடுவது குறித்துப் பேசிய ரிங்கு சிங் “நான் இந்த அணிக்கு வந்த பிறகு தான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். முன்னணி வீரர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. போட்டியைக் கணித்து விளையாடுவதில் என்னுடைய திறமை மேம்பட்டிருப்பதாக தற்போது உணர்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்