"இது தான்யா ஹீரோயிசம்..." தனியாளா போராடிய 'சாம்' குர்ரானுக்கு கிடைத்த அசத்தல் 'பாராட்டு'... "அத சொன்னது யாருங்குறது தான் ஹைலைட்டே!!"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே, இறுதியாக நடைபெற்றிருந்த ஒரு நாள் தொடரை, இந்திய அணி கைப்பற்றி அசத்தியிருந்தது.

"இது தான்யா ஹீரோயிசம்..." தனியாளா போராடிய 'சாம்' குர்ரானுக்கு கிடைத்த அசத்தல் 'பாராட்டு'... "அத சொன்னது யாருங்குறது தான் ஹைலைட்டே!!"

இதில், கடைசி ஒரு நாள் போட்டியில், இங்கிலாந்திற்கு 330 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்திருந்தது.தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள், அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், இளம் வீரர் சாம் குர்ரான் (Sam Curran), தனியாளாக நின்று இந்திய அணிக்கு ஆட்டம் காட்டினார்.

இதனால், போட்டியின் இறுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது. இறுதியில், 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று தொடரை சொந்தமாக்கியது.

கடைசி வரை களத்தில் நின்று போராடிய சாம் குர்ரான், 95 ரன்கள் அடித்திருந்த நிலையில், தன்னால் அணியை வெற்றி பெறச் செய்ய முடியவில்லை என மைதானத்திலேயே வருந்தினார். இங்கிலாந்து அணி தோல்வியடைந்தாலும், சாம் குர்ரானின் போராட்டத்திற்கு, ரசிகர்கள் அனைவரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

வரவிற்கும் ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சாம் ஆடவுள்ளதால், அவர் மீதான நம்பிக்கையும் அதிகரித்துள்ளது. இதனிடையே, போட்டிக்கு பின்னர், தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்த சுற்றுப்பயணத்தில் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டேன். இந்த தொடரின் ஒரு பகுதியாக நான் இருந்தது மகிழ்ச்சி. இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்' என புகைப்படம் ஒன்றுடன் சாம் குர்ரான் ட்வீட் செய்திருந்தார்.

 

இது ரசிகர்கள் மத்தியில், அதிகம் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா (Anand Mahindra), சாம் குர்ரானின் டீவீட்டைப் பகிர்ந்து, 'ஹீரோயிசம், பணிவு மற்றும் கருணை ஆகியவற்றின் விளக்கம் என்ன என்பதை தேடுபவர்களுக்கு' என சாம் குர்ரானை உதாரணமாக குறிப்பிட்டு, பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

 

கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஆர்வமுடைய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, சாம் குர்ரானை பாராட்டி ட்வீட் செய்துள்ளது, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்