"'ஆஸ்திரேலியா'ல போய் எவ்ளோ பெரிய 'விஷயம்' பண்ணிட்டு வந்துருக்காங்க... அவங்களுக்காக இது கூட இல்லன்னா எப்டி??..." 'இளம்' இந்திய வீரர்களுக்கு அடித்த 'ஜாக்பாட்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா மண்ணில் வைத்து அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியிருந்தது.

"'ஆஸ்திரேலியா'ல போய் எவ்ளோ பெரிய 'விஷயம்' பண்ணிட்டு வந்துருக்காங்க... அவங்களுக்காக இது கூட இல்லன்னா எப்டி??..." 'இளம்' இந்திய வீரர்களுக்கு அடித்த 'ஜாக்பாட்'!!!

முன்னணி வீரர்கள் யாருமில்லாத இந்திய அணியில், டெஸ்ட் போட்டிகளில் அதிக அனுபவமில்லாத இளம் வீரர்களே இடம் பெற்றிருந்த போதும், அதிக பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி சாதனை வெற்றியை இந்திய அணி பெற்றது.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த வெற்றித் தொடராக இது பார்க்கப்படும் நிலையில், இந்திய அணி வீரர்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. ஆஸ்திரேலிய தொடர் முடிந்து தற்போது இந்தியா திரும்பியுள்ள வீரர்களுக்கும் அவர்களது சொந்த ஊரில் வைத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த தொடரில் சிறப்பாக ஆடி சாதித்துக் காட்டிய நடராஜன், சிராஜ், வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில், நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர் உள்ளிட்ட ஆறு இந்திய இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு மஹிந்திரா தார் காரை பரிசாக அளிக்கப் போவதாக மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக ஆஸ்திரேலியா வந்த நடராஜன், ஒரு நாள் போட்டி, டி 20 மட்டும் டெஸ்ட் போட்டி என மூன்றிலும் களமிறங்கி தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். அதே போல, வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் தனது தந்தை உயிரிழந்த போது கூட இந்தியா செல்லாமல், டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி எனது தந்தைக்கு அஞ்சலி செலுத்துவேன் என தெரிவித்திருந்தார். அதே போல, கொடுத்த வாக்குறுதியை அவர் நிகழ்த்தியும் காட்டினார்.

சுப்மன் கில் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக பேட்டிங் செய்திருந்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆல் ரவுண்டராக கலக்கி இந்திய அணி தொடரை கைப்பற்ற காரணமாக இருந்தனர்.

மற்ற செய்திகள்