Video: இதெல்லாம் 'தடை' பண்ணியாச்சுன்னு சொல்லிட்டு... இப்படி கண்டுக்காம நிக்குறீங்க?... அம்பயரை வறுத்தெடுத்த ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி ஹைதராபாத்தை பேட்டிங் செய்யும்படி பணித்தது. இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 147 ரன்கள் மட்டும் எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில் டெல்லி அணியின் முக்கிய பந்துவீச்சாளர் அமித் மிஸ்ராவின் செய்கை கிரிக்கெட் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. கொரோனா காரணமாக எச்சிலை தொட்டு பந்தை தேய்ப்பது இந்த தொடரில் தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனால் நேற்றைய போட்டியில் 7-வது ஓவரை வீசிய மிஸ்ரா எச்சிலை தொட்டு பந்தை தேய்த்து பின்னர் வீசினார். அந்த பந்து சானிடைசரால் சுத்தம் செய்யப்படவில்லை.
இதைப்பார்த்த ரசிகர்கள் அமித் மிஸ்ராவின் செய்கையை அம்பயர் ஏன் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கிறார்? அந்த பந்து சானிடைசரால் சுத்தம் செய்யப்பட்டதா? இல்லையா? என கேள்விக்கணைகளை எழுப்பி அம்பயரை வறுத்தெடுக்க ஆரம்பித்து இருக்கின்றனர். அமித் மிஸ்ரா எச்சிலை தொட்டு பந்தை தேய்த்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
— faceplatter49 (@faceplatter49) September 29, 2020
@IPL icc has Banned use of saliva and players have to use sweat instead of saliva .. still Amit mishra bowling at 6.1 over of the inning used saliva to shine the ball ...
— Ayush Shukla (@Ayush200Shukla) September 29, 2020
மற்ற செய்திகள்