'மேரேஜ் மட்டுமில்ல.. மேட்சும் ஒரு டைம்தான் சார் வரும்!'.. கல்யாணத்துல மாப்பிள்ளை செஞ்ச காரியம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிரிக்கெட் என்றால் உலகையே மறந்து பறக்கும் அளவுக்கு ரசிகர்கள் இருப்பதை மீண்டும் ஒரு கிரிக்கெட் ரசிகர் நிரூபித்துள்ளார். 

'மேரேஜ் மட்டுமில்ல.. மேட்சும் ஒரு டைம்தான் சார் வரும்!'.. கல்யாணத்துல மாப்பிள்ளை செஞ்ச காரியம்!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மழை காரணமாக ஆஸ்திரேலியாவுடனான முதல் டி20  போட்டியினை விளையாட முடியாமல் போனது. 

இதனையடுத்து கடந்த 5-ஆம் தேதி கான்பெர்ராவில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா வென்றது. இந்த மேட்சினை தனது திருமணத்தின் போது கூட மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டும் என்பதற்காக ஹாசன் தஸ்லீம் என்பவர் திருமணச் சடங்குகள் அனைத்தையும் கிரிக்கெட் பார்த்துக்கொண்டே பின்பற்றியிருக்கிறார். 

அமெரிக்காவில் வசிக்கும் ஹாசன் தஸ்லீமின் இந்த செயலை ஐசிசி பகிர்ந்துள்ளது. இதுபற்றி ஹாசன் தஸ்லீம் திருமணம் என்பதற்காக மேட்சை மிஸ் பண்ண முடியுமா? என்று பதிவிட்டிருக்கிறார். 

CRICKET, WEDDING