‘முதல் போட்டியிலேயே 11 ஆண்டுகால ஐபிஎல் சாதனை முறியடிப்பு’.. வரலாறு படைத்த மும்பை வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர்களின் 11 ஆண்டுகால சாதனையை தனது முதல் போட்டியிலேயே மும்பை வீரர் அல்ஜாரி ஜோசப் முறியடித்துள்ளார்.

‘முதல் போட்டியிலேயே 11 ஆண்டுகால ஐபிஎல் சாதனை முறியடிப்பு’.. வரலாறு படைத்த மும்பை வீரர்!

ஐபிஎல் தொடரின் 19 -வது போட்டி இன்று(06.04.2019) ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் பௌலிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான, வார்னர் 15 ரன்களிலும், பாரிஸ்டோவ் 16 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மற்ற வீரர்களும் வந்த வேகத்தில் அடுத்தடுத்து அவுட்டாக 17.4 ஓவர்களில் 96 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.

இப்போட்டியின் மூலம் ஐபிஎல் தொடரில் அறிமுகமான மும்பை இந்தியன்ஸ் வீரர் அல்ஜாரி ஜோசப் என்ற இளம் வேகப்பந்து வீச்சாளர், 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்து 11 ஆண்டுகளாக சோஹல் தன்வீரின் சாதனையை  முறியடித்துள்ளார். சோஹல் தன்வீரின் 2008 -ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் 14 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை எடுத்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது

IPL, IPL2019, MUMBAIINDIANS, SRHVSMI, ALZARRIJOSEPH, ONEFAMILY, RECORD